மூன்றாவது சீசன் தொடங்கி உள்ள நிலையில் இது ஒரு மீள் பதிவு.
Lost
ஸ்டார் மூவீஸ் தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்படும் தொடர்
Lost - தொலைந்தவர்கள்
ஒரு மர்மமான தீவு
ஒரு விமான விபத்து
அதில் உயிர் தப்பிய 45 நபர்கள்
இப்படி தொடங்கிய தொடர் இது வரை வந்துள்ள தொடர்களுல் மிகச் சிறந்த சஸ்பென்ஸ் தொடர் என்று கூறினால் மிகையாகாது.
இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் இந்த கதையின் கதாபாத்திரங்கள்தான்.
பயணம் செய்யும் நேரம் நாம் அருகில் உள்ள நபர் நல்லவரா? கெட்டவரா? குற்றவாளியா? நாத்திகரா? போதை மருந்து பழக்கம் உள்ளவரா என்று கவலையுறத் தேவை இல்லை. ஆனால் நாம் பயணம் செய்த விமானம் காற்று அழுத்தத்தில் சிக்கி பயணம் செய்ய வேண்டிய பாதையில் இருந்து விலகி 1000 மைல் தள்ளிச் சென்று விபத்துக்குள்ளாகும் பொழுது, அதுவும் ஒரு அனுமாஷ்யமான தீவில் சென்று விபத்துக்குள்ளாகும் பொழுது இது முக்கியமாகி விடுகிறது.
ஆகவே இந்த தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் முன் கதை அதாவது இந்த விபத்து நடக்கும் முன் அந்த கதாபாத்திரம் என்ன செய்து கொண்டிருந்தது என்பது தீவில் நடக்கும் சம்பவங்களிடையே காண்பிக்கப் படுகிறது.
இந்த தொடரின் ஆரம்பம் விமான விபத்தில் ஆரம்பிக்கிறது.
ஜாக் கண் விழிக்கிறான் அவன் முன் கரும் புகை எழும்புகிறது.எழுந்தால் விமானம் விபத்துக்குள்ளாகி கிடக்கிறது.ஜாக் டாக்டர் ஆகையால் விபத்துக்குள்ளாகி இருக்கும் அனைவருக்கும் உதவி செய்கிறான், அப்பொழுது விமானத்தில் இருக்கும் எரிவாயு தீப் பற்றி மீதம் உள்ள பகுதி வெடித்து சிதறுகிறது.
இப்படி பரபரப்பாக ஆரம்பிக்கும் தொடரில் சீக்கரமே ஒரு அனுமாஷ்யமும் கலக்க ஆரம்பிக்கிறது.
வெளி உலகை தொடர்பு கொள்ள ரேடியோவைத் தேடி சென்ற இடத்தில் விமான ஓட்டுனர் ஒரு அனுமாஷ்யமான முறையில் கொல்லப் படுகிறார்.
பிறகு அந்த விமானத்தில் வந்த ஒவ்வொரு கதா பாத்திரமும் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.
டாக்டர் ஜாக், கைதி கேட், போதை பழக்கத்திற்கு அடிமையான சார்லி, இராக் போராளி சையித், ஏமாற்றி பணம் பறிக்கும் சாயர், ஆங்கிலம் பேச முடியாத கொரியன் தம்பதி ஜின் சன், நிறை மாத கர்ப்பிணியான கிளைர், மத நம்பிக்கை கொண்ட லாக், 150 மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான கர்லி போன்றவர் அறிமுகம் ஆகிறார்கள்.
இவர்களைப் பற்றி ஒவ்வொரு வாரமும் நாம் அறியும் பின்புலன்கள் நம்மை மேலும் மேலும் சஸ்பென்ஸின் உச்சிகே கொண்டு செல்ல தொடங்குகிறது.
உதாரணமாக நாம் லாக் பக்க வாதம் வந்து சக்கர நாற்காலியில் இருந்தவர், விபத்தின் பொழுது இந்த தீவுதான் அவரை குணப்படுத்தியது என்று நம்புகிறார்.
கிளைரை இந்த விமானம் விபத்துக்குள்ளாக போகிறது என்பதை அறிந்த ஒரு ஜோதிடர் இந்த விபத்தில் சிக்க வேண்டும் என்று திட்டமிட்டே இந்த விமானத்தில் பயணம் செய்யச் சொன்னார் என்று அறிகிறோம். ஏன் விபத்து நடக்கும் என்று தெரிந்தே நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணை விமானத்தில் செல்லச் சொன்னார் என்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்த தொடரில் கதை அமைப்பு, கதாபாத்திரம் ஆகியவற்றோடு வசனங்களும் குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக லாக் சார்லியிடம் ஒரு பட்டாம் பூச்சியைக் காட்டி "இந்தப் பூச்சி பல நாட்கள் மிகவும் சிரமப்பட்டு தன்னுடய ககூனில் இருந்து வெளியே வரும். நான் இந்த பூச்சிக்கு உதவி செய்வதாக நினைத்து இந்த கத்தியால் இந்த ககூனில் ஒரு கீறல் இடலாம். ஆனால் அப்படிச் செய்தால் வெளியே வரும் பட்டாம் பூச்சி பலவீனமாகிவிடும், அதனால் உயிர் வாழ இயலாது. இயற்கை அது போலத் தான் அனைவருக்கும் போராட்டம் மூலம் பலம் அளிக்கிறது" கூறும் வசனத்தைக் கூறலாம்.
இந்த தொடரின் சென்ற ஆண்டு கோல்டன் குளோப் விருது பெற்றது என்பதும் கூறிப்பிடத்தக்கது.
இந்த தொடரை பற்றி மேலும் எழுத திட்டமிட்டுள்ளேன்.
Thursday, October 12, 2006
Subscribe to:
Posts (Atom)