Monday, July 17, 2006

ஐம்பது பதிவுகள்

என்னடா எல்லாம் ஆயிரத்தை நோக்கி போயிட்டு இருக்காங்க ஐம்பதுக்காக ஒரு பதிவான்னு எல்லாம் நீங்க நினைக்கலாம். அதாவது ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பக்கம்ன்னு வைச்சுகிட்டா ஐம்பது பக்கங்கள் நான் தமிழ்ல எழுதியிருக்கேன் என்று நினைக்கும் பொழுது நிஜமாலுமே எனக்கு சந்தோசமா இருந்தது அதனால்தான் சரி நாம சந்தோசத்தை வெளிப்படுத்திடுவோம்ன்னு ஒரு பதிவு. அப்படியே நான் எழுதுனது இது இதை பத்தி அப்படின்னு ஒரு ஓஸி விளம்பரமும் பண்ணிக்கலாமே.

முதலில்

நன்றி கூறும் படலம்

தமிழ்மணத்துக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழ்மணம் இல்லையென்றால் கண்டிப்பாக தமிழர் பலருக்குள் இயற்க்கையாகவே உள்ள தமிழார்வம் போல் என்னுள்ளும் இருக்கும் தமிழார்வத்திற்கு தீனி போட்டிருக்க முடியாது. நானெல்லாம் தமிழில் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். அதற்காக தமிழ் மணத்துக்கு நன்றிகள்.

நான் எழுதற எழுத்து எல்லாம் சும்மா எழுத வேண்டுமே என்ற ஆர்வத்திற்காக எழுதுவது. மத்தபடி கதை எழுதணும் கவிதை எழுதணும் அப்படின்னெல்லாம் நினைத்ததே இல்லை. எதோ கிறுக்கறதுக்கு கவிதை, கதை என்று தமிழ் மணத்திலிருப்பவர்கள் கோபித்து கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் எழுதறதுக்கு பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதில்லை(எதோ சுமாரா இருந்தாலாவது எதிர்பார்க்கலாம்). இருந்தாலும் பின்னூட்டம் வர வேண்டும் என்ற ஆசை உண்டு. இப்படி இருக்கும் பொழுது என் பதிவுகளையும் படித்துவிட்டு எதோ சுமாரா எழுதறான் இவனை ஊக்குவிப்போம் என்ற எண்ணத்தில் பின்னூட்டம் இட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் சக வலைப் பதிவாளர்கள் அனைவருக்கும். இன்ஸ்பிரேசன் என்பது இரு வகைகளில் வரும். எப்படி எழுதறான் பாரு இதை மாதிரி நாமும் எழுதலாம் என்று, இவனெல்லாம் எழுதறான் நானும் எழுதலாம் என்று. இங்குள்ள வலைப் பதிவாளர்கள் அனைவருமே எனக்கு முதல் வகையில் இன்ஸ்பிரேசன் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். நான் பலருக்கு பின்னூட்டம் இட வேண்டும் என்று நினைத்து இட்டதில்லை அவர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது நீங்க எல்லாரும் அருமையாக எழுதுகிறீகள் என்று உங்கள் அனைவரின் எழுத்துக்களும்தான் என்னுடைய பூஸ்ட்.

தவறுகளுக்கு வருந்துதல்

எனக்கு வாழ்க்கையில பெரிய கொளுகை எல்லாம் கிடையாது. எந்த மனிதனுக்கும் மனதாலும் துன்பம் தராதே என்ற ஒன்று மட்டுமே கொள்கை. அதையும் சரியா பின்பற்றுவது இல்லை. சில இடக் கூடாத பின்னூட்டங்கள். சில சொல்ல கூடாத கருத்துக்கள் என்னிடம் இருந்து வந்திருக்கிறது அது அனைத்தும் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய பதிவுகளில் எனக்கு பிடித்தது

விளம்பரம் என்றெல்லாம் நினைக்காதீங்க ஐம்பது பதிவு எழுதீட்டமேன்னு ஒரு சந்தோசத்துள முன்னாடி எழுதினது எல்லாம் எடுத்துப் பார்த்தேன். அதுல பிடித்திருந்தது கீழே.

1. உதட்டோரப் சிரிப்பழகு

எதோ என் கிறுக்கல்களிலேயே ஒரு சுமாரான கிறுக்கல் என்பது என் எண்ணம்.

2. யோசித்து பார்க்கிறேன் காதல் என்னவென்று

முதல் கிறுக்கல் அதனால்


3. எண்ணமாறு

ஏனோ தெரியல இந்த ஆறு விளையாட்டில் நான் எழுதுனது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நன்றிகள் அனைவருக்கும்.

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்.

21 comments:

said...

//"ஐம்பது பதிவுகள்" //
இதுக்கு பேரு தான் 'ஐம்பதிலும் ஆசைவரும்' என்பதா ?
:)))))

said...

வாழ்த்துக்கள் குமரன். இன்றுதான் உங்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டேன். பார்த்தீர்களா?

http://ibnubasheer.blogsome.com/2006/07/17/kumaran/

said...

சரி...அம்பதுன்னா அம்பது.

மத்ததையெல்லாம் மைல் கல்லுன்னா இதை கிலோமீட்டர்
கல்லுன்னு வச்சுக்கலாம்.

வாழ்த்து(க்)கள் குமரன்.

நல்லா இருங்க.

said...

கோவி. கண்ணனிடமிருந்து கோவி. கண்ணன் ஸ்டைல் பதில் :-))))

தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் இப்னு பஷீர் சென்று பார்க்கிறேன்...

said...

துளசி அவர்களே நீங்கள் சொன்னதால் இதனை கிலோமீட்டர் கல்லாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

எழுத்துப் பிழை அவர்களே உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அடிக்கடி வந்து சொன்னீர்கள் என்றால் நானும் தமிழில் தேர்ச்சி பெற்று விடுவேன்.

said...

வாழ்த்துச் சொல்லத் தான் வந்தேன் செந்தில் குமரன்.. உங்க ஆறு பதிவுல என் பேரும் போட்ருக்கீங்க.. லிங்க் ஏதாச்சும் கொடுத்திருந்தீங்கன்னா நிச்சயம் கண்ணில் பட்டிருக்கும்.. ம்ம்ம்.. அதோட "பொங்கியது போதும்.." அந்தப் பதிவு தான் உங்களுக்குப் பிடிக்குமா?!!:) அது சும்மா காமெடி கலாட்டா பதிவு :)) எனக்கு ஒரே ஆச்சரியம்..அது தான் பிடிக்கும்னு பார்த்ததும்.

சமீபத்துல பல விவாதங்களில் உங்க நடுநிலை பார்வை நல்லா இருந்து.

50 பதிவு வந்துட்டீங்களா.. அப்படியே எழுதுங்க.. அப்பப்போ வந்து கண்டுக்கிறேன் :)

said...

நன்றி பொன்ஸ் முதல் முறை வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
///
சமீபத்துல பல விவாதங்களில் உங்க நடுநிலை பார்வை நல்லா இருந்து.
///
எல்லா இடத்துலயும் போய் நல்ல உளறீட்டு இருக்கனோன்னு நினைச்சேன். இல்லைன்னு சொன்னதுக்கு நன்றி.
"பொங்கியது போதும்.." காமெடின்னாலும் உங்க தமிழ் நல்லா இருந்தது மேடைப் பேச்சுக்கள்ல பேசப் படுற தமிழ்னாலும் எல்லாராலயும் எழுத முடியாது அதுதான் புடிச்சிருந்தது.

said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள் செந்தில் குமரன். உங்களின் 'எண்ணமாறு' பதிவினைப் படித்தேன். இன்னும் பின்னூட்டம் இடவில்லை. விரைவில் இடுகிறேன்.

said...

நன்றி குமரன் அவர்களே. படிச்சுட்டு சொல்லுங்க.

said...

குமரன்
50 பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல; வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதங்கள். பேசுவது, படிப்பது என்பது ஒரு அனுபவம். எழுதுவது என்பது வரலாற்றில் சாட்சியாய், காட்சியாய் நிற்பது. நமது சிந்தனைகளை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவது. சமூகத்தின் நலனுக்காக நாம் பங்களிப்பது. எனவே, தங்களது எழுத்து வளமையை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொடரங்கள் உங்கள் வெற்றி பயணத்தை.

said...

//இங்குள்ள வலைப் பதிவாளர்கள் அனைவருமே எனக்கு முதல் வகையில் இன்ஸ்பிரேசன் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்.//
உண்மையா தானே சொல்லுறீங்க....

குமரன், உங்க பின்னூட்டம் பல பதிவுகளில் பார்த்தேன். நியாயமாக கருத்துகளை மிகவும் நியாயமான முறையில் எடுத்து வைத்து இருந்தீர்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்த்துக்கள்

said...

ஊக்குவிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றிகள் சந்திப்பு அவர்களே...

நாகை சிவா அவர்களே நான் கூறியது அனைத்தும் உண்மை உணமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி எதோ என் மதிக்கு தோன்றியதை ஆங்காங்கே கூறிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவே.

said...

//நான் எழுதறதுக்கு பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதில்லை(எதோ சுமாரா இருந்தாலாவது எதிர்பார்க்கலாம்). //
இதுக்கு பேருதான் தன்னடக்கமா ?
ம்.... நடத்துங்க நடத்துங்க :)

said...

கோவி. உண்மையா உணர்ந்து சொன்னது. தமிழ் மணத்தில் இருக்கும் ஆற்றலுக்கு முன் நான் ஒண்ணுமே இல்லை.

said...

குமரன்,
உங்களுக்கு நான் அதிகம் பின்னூட்டமிட்டதில்லை என்றாலும் உங்களுடைய பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தொடர்ந்து படிக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

50க்கு வாழ்த்துக்கள்.

said...

செந்தில், உண்மையாக ரொம்ப நல்லா எழுதுறீங்க. மிகவும் பக்குவமாக இருக்கு உங்க படைப்புகள் !
எனக்கு நண்பர்கள் நிறைய உண்டு. அதில் தமிழார்வம் மிக்க நண்பர்களில் உங்களுக்கு தனியிடம் கொடுத்து விட்டேன் !

பெருமிதத்துடன் - குமரன்.

said...

வாழ்த்துக்கள். இன்னும் பல அருமையான நல்ல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

பி.கு:- உங்கள் தளத்தின் பின்புலமும், [background]எழுத்தின் நிறமும் கண்ணைக் குத்துது. வேறு நிறத்திற்கு மாற்றினால் நல்லாயிருக்குமென நினைக்கிறேன்.

said...

நன்றீங்க வெட்டிப் பயல் நீங்க எந்த நேரத்தில சொன்னீங்களோ நான் கான்டரவர்ஸியான பதிவில் பின்னூட்டம் இடப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

நன்றீங்க கும்மி

நன்றிங்க வெற்றி. நான் பல பின்புலங்களை முயற்சி செய்துகிட்டிருக்கேன் மாத்தீடறேன்.

said...

ஐம்பது பதிவா? அரை செண்ட்சூரி அடித்துவிட்டதை சாதாரணமா பதிவு போட்டு சொன்னா எப்படி? இனிப்பெல்லாம் அனுப்புற பழக்கமில்லையா? ;-) ஓ நேற்று கொரியரில் வந்த மிட்டாய் பெட்டி நீங்க அனுப்பியதுதானா, அதானே பார்த்தேன் எனக்கு மட்டும்தான் அனுப்புனீங்களா இல்ல எல்லாத்துக்குமா? ;-) வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், எதிர்பார்ப்புக்கள்

said...

வாழ்த்துக்கள் குமரன்,
தொடர்ந்து எழுதுங்கள்.
தொடர்ந்து எழுதினால் எழுத்து நாம் சொல்வதைக் கேட்கும்.

said...

வணக்கம் குமரன்

இன்றுதான் உங்களின் ஐம்பது பதிவு கண்டேன், வாழ்த்துக்கள், இன்னும் 5000 இற்கு மேல் கடக்க வேண்டும்.