Thursday, September 07, 2006

Lage raho munnabhai

முன்னாபாய் எம்.பீ.பீ.எஸ். இந்திய சினிமா உலகில் ஒரு திருப்புமுனையான படம். அந்த டீமில் இருந்த பல பேர் இணைந்து கொடுத்திருக்கும் படம் தான் Lage Raho Munnabhai.

ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை ஒரு cult status அடைந்த படத்திற்கு sequel கொடுப்பது எளிதல்ல. அந்த படத்தின் எந்த அம்சங்களை இணைப்பது எந்த அம்சங்களை விடுவது என்பதை எல்லாம் முடிவு செய்து ஒரு படம் தருவதும் எளிதல்ல. இருந்தாலும் இந்த டைரக்டர் அதனை மிக அருமையாக செய்திருக்கிறார். "jaadu ki jappi" போன்ற விஷயங்களை முற்றிலுமாக விட்டு விட்டு இந்தப் படத்தை எடுத்ததற்க்காவே டைரக்டருக்கு ஒரு ஷொட்டு.

இன்று நாம் வாழும் உலகில் மஹாத்மா காந்தியின் தத்துவங்கள் முன்பு எப்போதும் இருந்ததை விட அதிகமாக தேவைப்படுகிறது. வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்பதையும் இன்றைய உலகிலும் காந்திய தத்துவங்களை பல இடத்தில் நம்மால் உபயோக்கிக்க முடியும் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார் டைரக்டர்.

அதற்காக இது எதோ சீரியஸ் படம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆரம்பம் முதல் கடைசி வரை முன்னாவும் சர்க்கியூட்டும் செய்யும் காமெடி கலாட்டா தான் படம். அதில் மிக அருமையாக காந்தியக் கொள்கைகளை சொல்லி இருப்பது டைரக்டரின் திறமை.

காந்தியின் ஆத்மாவிடம் கேள்வி ஒன்று கேட்கப் படுகிறது "என் வீட்டின் பக்கத்தில் ஒரு சிறுவன் உங்களுடைய சிலையின் ஒரு கையை உடைத்து விட்டான் அவனை என்ன செய்வது?"

இதற்கு காந்தி "அந்த சிறுவன் கையில் இன்னொரு கல் கொடுத்து என் சிலை முழுவதையும் உடைத்து விட சொல்லுங்கள். நாட்டில் எனக்கு வைக்கப் பட்டிருக்கும் எல்லா சிலைகளையும் உடைத்து விடுங்கள். எனக்கு அங்கீகாரம் செயவதாக இருந்தால் என் கருத்துக்களை மனதில் கொள்ளுங்கள். என் படத்தை ஆபிஸில் மாட்டிக் கொண்டு அதே இடத்தில் லஞ்சம் வாங்குவதால் என்ன பயன்? என் கருத்துக்களை மனதில் வையுங்கள் என் படம் எல்லாம் தேவையில்லை." என்று கூறுவதாக அமைந்திருக்கிறது ஒரு காட்சி.

காந்தி உயிருடன் இருந்திருந்தால் இதையே தான் கூறியுருப்பார் என்றே எண்ணுகிறேன். மேலும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் காந்தி என்ற மனிதரா முக்கியம் அவர் என்ன அஹிம்சை, அன்பு வழி எல்லாம் முதல் முதலாக போதித்தவரா என்ன? இல்லையே காந்தி என்ற மனிதரிடம் குறைகள் உண்டு ஆனால் அவர் போதித்த அஹிம்சையில், அன்பு வழியில் குறைகள் இல்லையே அதனால் காந்தி என்ற மனிதரை விடுத்து அஹிம்சை அன்பு செலுத்துவதில் தவறில்லையே என்பதாக எனக்கு இந்தக் காட்சி பட்டது.

இந்த படத்தில் முன்னா, சர்க்கியூட்டாக சஞ்சய் தத்தும் அர்ஷத் வார்ஸி வாழ்ந்திருக்கிறார்கள். brilliant performance.

வித்யா பாலனுக்கு அதிகமாக நடிக்க வாய்பில்லை என்றாலும் அவருக்கு ஒரு onscreen presence இருக்கிறது ஒரு charisma இருக்கிறது. ரொம்ப அழகாக இருக்கிறார்.

போமன் ஈரானி மற்றுமொரு solid performance.

மியூசிக் மட்டும் avarage தான். ஆனால் படத்துடன் ஒட்டி இருப்பதால் நன்றாக இருக்கிறது.

rediffல் 4.5/5 ஸ்டார் கொடுத்து ஆஸ்காருக்கு அனுப்புங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்(ஓம்காராவிற்கே 3 தான் கிடைத்தது என்று நினைக்கிறேன்).

நான் 5/5 கொடுக்கிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ஒரு முறை மட்டும் அல்ல.

8 comments:

said...

குமரன்,

முன்னாபாய் எம்பிபிஸ் தானே தமிழில் கமல் நடித்த வசூல் ராஜாவாக வந்தது.

காந்திஜி பற்றி மிக நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி குமரன் !

said...

Totally agreed kumaran
I watched the first show..itself.in singapore
It was really a very good movie..
and such a movie..and is equally entertaining..
I was about to write about it..neenga mundikittinga ;)

said...

Ur review has made me now to look for the movie..I guess its playing at Satyam...

said...

நன்றி கோவி.

நன்றி அனிதா பவன்குமார் அவர்களே நான் சொன்னால் என்ன மீண்டும் எழுதுங்கள் பலர் அறிந்து கொள்ளட்டும்.

பாருங்கள் தேவ் அனைவரும் பார்க்க வேண்டிய படம். நான் மீண்டும் ஒரு முறை பார்க்க எண்ணியிருக்கிறேன்.

said...

குமரன் தங்கள் விமர்சனம் வெகு சிறப்பு. ஒரு இந்தி திரைப்படத்தின் பொழுதுபோக்கு அம்சத்தைப் பற்றிய விமர்சனத்துடன், அது சொல்ல விரும்பும் கருத்தை பிரித்தறிந்து அழகு தமிழில் தாங்கள் எழுதியிருப்பது மிக நன்று.

//கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்
காந்தி என்ற மனிதரா முக்கியம் அவர் என்ன அஹிம்சை, அன்பு

வழி எல்லாம் முதல் முதலாக போதித்தவரா என்ன? இல்லையே காந்தி என்ற மனிதரிடம் குறைகள்

உண்டு ஆனால் அவர் போதித்த அஹிம்சையில், அன்பு வழியில் குறைகள் இல்லையே அதனால் காந்தி என்ற மனிதரை விடுத்து அஹிம்சை அன்பு செலுத்துவதில் தவறில்லையே என்பதாக எனக்கு இந்தக் காட்சி பட்டது.//

மனதைத் தொட்டன இவ்வரிகள். பாராட்டுகள்.

said...

நன்றீங்க கைப்புள்ள எதோ எனக்கு தோணிணதை அடிச்சிருக்கேன் அவ்வளவுதான்.

said...

குமரன், உங்கள் வழக்கமான பானியில் அருமையான பதிவு...

said...

Kumaran,
This is the first time I am seeing ur blog. KUDOS!
I too saw Lage Raho Munnabhai and posted its review in mine. It was rocking. Moreover it carried the tradition and legacy of Munnabhai prequel. Sure, a second watch is recommended!!!
Kasi