ஒரிஜனல் கட்டுரை இங்கே
ரெட்டிப்பில் இன்று மும்பை குண்டு வெடிப்பில் இறந்த, பாதிக்கப்பட்ட சிலருடைய கட்டுரைகள் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை இங்கே கொடுத்திருக்கிறேன்.
ரமேஷ் விட்டல் நாயக் ஒரு உடைந்து போன தந்தை
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரமேஷ் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். பிப்ரவரி 24லில் அவருடைய இளைய பிள்ளையான ரச்ஷனா பாத்ரூமில் தடுக்கி விழுந்து மிக மோசமாக அடிப்பட்டது.
ஜீலை 11ல் இவருடைய இரண்டாவது மகள் நந்தினியை குண்டு வெடிப்பில் இழந்தார். இவரும் இவர் மகன் ஆஷிஷும் ஒரு ஆட்டோமொபைல் பட்டறை வைத்துள்ளார்கள்.
ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மகள்களை இழந்துள்ளேன். வெளியில் பார்ப்பதற்கு உயிரோடு இருப்பது போல தெரியும் ஆனால் உண்மையில் உள்ளே இறந்து விட்டேன்.
ப்ரீத்தி சாவந்த்
இவருடைய கணவர் இந்த ரயில் விபத்தில் காயமடைந்து அப்போது இருந்தே கோமாவில் இருக்கிறார். இவருடைய கணவருக்கும் காய்கறிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
இவருடைய கணவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது கூட தெரியாது.
இவருடைய கணவருக்கு ஐந்து முறை ஆப்பரேசன் நடந்துள்ளது. இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை.
கிளாடிஸ் டீசேல்ஸ்
என்னுடைய தம்பி சான்போர்ட் முதல் வகுப்பு பாஸ் வைத்திருந்தாலும் வழக்கமாக இரண்டாம் வகுப்பில் தான் பயணிப்பான். குண்டு வெடித்த நாளில் முதல் வகுப்பில் பயணம் செய்தான். குண்டு வெடித்த அதே நாளில்தான் எங்களுடைய தாயார் வெளிநாடு சென்றிருந்தார். அங்கே இறங்கிய உடனே திரும்பி வருமாறு ஆகி விட்டது. சான்போர்டின் மரணம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. தம்பியுடைய 10 வயது மகனும், மனைவியும் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவே இல்லை.
குண்டு வெடிப்பில் 187 பேர் மட்டுமே இறந்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் என் தம்பியைத் தேடி நான் சென்ற ஆஸ்பத்திரிகளிலும், பிணகிடங்குகளிலும் இரு(ற)ந்தவர்களின் எண்ணிக்கை கண்டிப்பாக இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு ஒரு அமைப்பையோ இல்லை மதத்தையோ இல்லை அரசாங்கத்தையோ இல்லை அரசியலையோ குறை கூறி அதன் பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடாது.
இது போன்ற குண்டு வெடிப்புகள் குறைய வேண்டுமெனில் எல்லோரிடமும் மாற்றங்கள் வர வேண்டும்.
ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் துவேஷங்கள், கோபங்கள் குறைந்தாலொழிய மகள்(ன்), கணவர், தம்பி என்று தொலைத்துக் கொண்டே தான் இருப்போம்.
மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் ஜாதிகளின் பெயரால் இன்று சண்டை இட்டுக் கொண்டு பிரிந்திருக்கும் நாம் அனைவரும் நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.
எல்லாமே உயிர்தான் எல்லாருமே மனிதர்கள் தான் என்பதை உணர வேண்டும். குல்லா, பட்டை, கிராஸ் என்று நம்பிக்கைகள் அடிப்படையில் நாம் மனிதர்கள் என்பதை மறக்க செய்து விடக் கூடாது.
துவேஷங்களை களையுங்கள் ப்ளீஸ்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் ஜாதிகளின் பெயரால் இன்று சண்டை இட்டுக் கொண்டு பிரிந்திருக்கும் நாம் அனைவரும் நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.
எல்லாமே உயிர்தான் எல்லாருமே மனிதர்கள் தான் என்பதை உணர வேண்டும். குல்லா, பட்டை, கிராஸ் என்று நம்பிக்கைகள் அடிப்படையில் நாம் மனிதர்கள் என்பதை மறக்க செய்து விடக் கூடாது.//
சரியாக சொல்லியிருக்கிங்க குமரன்,
முற்றிலும் உடன்படுகிறேன்.
நன்றி கோவி.
sathish kumar துவேஷங்கள் வேண்டாமே ப்ளீஸ்.
நாடுகளுக்கிடையே நடக்கும் பல பரிட்சையும் போட்டி பொறாமைகளும் அன்பால் கட்டுப்படுவன அன்று. வெளியிலிருந்து அமைதியைக் கெடுக்கவே அனுப்படும் கைக்கூலிகளும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் இருக்கும்வரை இத்தகைய அலங்கோலங்களை சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். நம்மால் "ஸப்கோ ஸன் மதி தே பகவான்" என்று பிரார்த்திக்கத்தான் முடியும். இது நிராசையினால் வரும் வார்த்தைகள் அல்ல. பிரார்த்தனையை நம்பிக்கையுடன் செய்தால் நல்லதே நல்லதே நடக்கும்.
வருகைக்கு நன்றி கபீரன்பன்.
ஏன் இந்த போட்டி நாடுகளுக்கிடையே சுதந்திரப் போரின் ஆரம்பம் வேறு வேறு நாடுகள் வேண்டும் என்றா ஆரம்பித்தது.
இந்தியா என்பதில் பெருமிதம் கொள்வோம் என்று சொல்லிக் கொள்ளும் நாம். இந்தியா என்பது ஒரு காலத்தில் பாகிஸ்தானையும் உள்ளடக்கியது என்பதை மறந்து விடப் போகிறோமா?
கற்பனைக் கோடுகள் நாடுகளைப் பிரிப்பதால் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டே தான் இருக்கப் போகிறோமா?
ஒவ்வொருவரும் துவேஷங்களைக் களைந்து செயல்படாவிட்டால் இது என்றுமே நிற்காது.
நீதான் காரணம் என்று விரலை சுட்டும் ஒவ்வொருவரும் மீதி மூன்று விரல்கள் தம்மை சுட்டுவதை உணர்வார்களா?
தங்களின் பார்வையை நமது நாட்டளவிற்கு குறுக்கிக் கொள்ள வேண்டாம். இன்று வன்முறை எல்லா நாடுகளுக்கும் பரவி விட்டது. அதன் அடிப்படை காரணத்தை தான் "அன்பால் கட்டுப்படுவது அன்று" என்று குறிப்பிட்டேன். இரு நாடுகள் போரில் இறங்குவது ஆதி காலம் தொட்டே இருந்து வருவது தானே. ஆனால் எத்தனை அரசர்கள் அசோகன் போல மனம் மாறி அமைதிக்காக உழைத்தனர்? எனவே இதை எல்லாம் இறைவனின் விளையாட்டு என்பர் சான்றோர். "யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி " என்கிறார் மணிவாசகர். அந்த விளையாட்டில் அமைதிக்காக உழைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அமைதியாக செயல்படுவதால் அது செய்திகளாக முக்கியத்துவம் பெறுவதில்லை. Our media want hype. Sensationalization.
ஷாகுல் ஹமீது என்ற பெயரில் கருத்துக்களை வெளியிட்டிருப்பவரே மீண்டும் ஒரு முறை பதிவைப் படித்துப் பாருங்கள்.
துவேஷங்கள் வேண்டாமே ப்ளீஸ்.
பதிவிற்கு நன்றி.
இன்னொரு அசம்பாவிதம் நிகழும் வரை மறந்து போகும் நிலையில், பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நினைவு கூர்வது வெகு அவசியம்.
புதுவை சரவணன் வழக்கமாக பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்வதில்லை என்னைத் திட்டி கிண்டல் செய்து வரும் பின்னூட்டங்களைக் கூட மட்டுறுத்துவதில்லை இருப்பினும் உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தல் செய்கிறேன். மீண்டும் ஒரு முறை
துவேஷங்கள் வேண்டாமே ப்ளீஸ்.
பாபா வருகைக்கு நன்றி.
கபீரன்பன் நீங்கள் சொல்வதுடன் அப்படியே ஒத்துக் கொள்கிறேன். அன்பாக அமைதியாக வாழ்வதால் கிடைக்கும் நன்மைகள் யாருக்கும் புரிவதே இல்லை. அதை விடக் கொடுமை தீவிரவாதம் என்று எதையோ பற்றி பேசுகிறார்கள். மனிதர்கள் ஒவ்வொருவருக்குள் இருக்கும் தீவிரவாதத்தை உணராமல் இல்லை தாங்கள் அதற்கு எப்படி துணை போகிறோம் என்பதை தெரியாமல் இருக்கிறார்கள். துப்பாக்கி தூக்கி கொலை செய்யும் தீவிரவாதிகளுக்கும் பல மனவக்கிர தீவிரவாதிகளுக்கு வித்தியாசம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது இவர்களுக்கு கிடைக்கவில்லை தங்களின் தீவிரவாதத்தை வெளிக்காட்ட அவ்வளவே.
Post a Comment