Tuesday, May 16, 2006

டாவின்சி கோட் படம் இந்தியாவில் தற்காலிக தடை

டாவின்சி கோட் படம் இந்தியாவில் தற்காலிக தடை செய்யப்பட்டது.

இன்னோவேடிவில் முன் பதிவு செய்தது வீணாகி விட்டது.

இங்கிலாந்திலும், அமெரிக்கா, பிரான்ஸில் தடை செய்யப் படாத படம் இந்தியாவில் மட்டும் தடை ஏன்?

டாவின்சி கோட் பொய் பறை சாற்றுகிறது என்று சொல்பவர்கள் பைபிள் மட்டும் எப்படி உண்மை சொல்கிறது என்று சொல்ல முடியும்.

பைபிளை கிறிஸ்து அவர்கள் எழுதவில்லையே அவர் கடவுள் என்று நினைத்த மனிதர்கள் எழுதியதுதானே?

விமர்சனங்களை தாங்க முடியாதவர்கள் ஏன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொல்ல வேண்டும்?

திரும்ப சென்று முன் பதிவை ரத்து செய்ய வேண்டும்

61 comments:

said...

யாருங்க அதை தடை செய்தது...நான் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்தது ஆச்சே...

D.V.D எதுக்கு இருக்கு...அதுல பார்த்தா போச்சு..

இனையத்துல கூட வரும். தரவிறக்கம் செய்து பார்க்கலாம்..

உங்க இமெயில் முகவரிக்கு லிங்க் அனுப்புகிரேன்...

said...

நல்ல வேளை நான் இந்தியாவில் இல்லை :)

said...
This comment has been removed by a blog administrator.
said...

//விமர்சனங்களை தாங்க முடியாதவர்கள் ஏன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொல்ல வேண்டும்?//

அதை கிறிஸ்தவர்கள் சொல்லவில்லையே ,கிறிஸ்து தானே சொன்னார். விமரிசனத்தை தாங்க முடியாதவர்கள் என்று யாரை சொல்லுகிறீர்கள் ?கிறிஸ்துவையா ?கிறிஸ்தவர்களையா ?

முதலில் யார் தடை கோரியது? யார் தடை விதித்தது என்றெல்லாம் விவரம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக யாரை குறை சொல்கிறீர்கள் என தெரியவில்லை.

said...

நன்றி ரவி எனக்கும் சில தரவிறக்கம் செய்ய சில முகவரிகள் எனக்கும் தெரியும் இருப்பினும் படத்தை திரை அரங்கில் சென்று பார்ப்பது போல் இருக்காது.

மனசாட்சி அப்படி நினைக்கவில்லை, ஆனால் இந்தியா எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டும் என்று நினைக்கிறது, கிறிஸ்துவ நாடுகளில் கூட வெளியாகும் படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

நன்றி நந்தன்

said...

ஆஹா பா.ஜ.க.விற்கு ஒரு matter கிடைத்துவிட்டது. பாராளமன்றத்தில் தூள் கிளப்பி விடுவார்கள்.

said...

மாயவரத்தான் உங்கள் நகைச்சுவைக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்.

ஜோ இந்திய பிஸப்புகள் தடை கோரியுள்ளார்கள், தடை கொடுத்தது Information and Broadcast ministry என்னுடைய கருத்து என்னவென்றால் நீங்கள் போதனை செய்யும் கருத்துக்களை நீங்களே பின் பற்ற மாட்டீர்களா?

இதனை பார்த்து நான் கிறிஸ்துவ மத எதிர்பாளன் என்று எண்ண வேண்டாம்.

என்னைப் பொருத்த வரை மதமே தேவை இல்லை.

நான் எழுதிய http://kathalregai.blogspot.com/2006/05/4.html பதிவை நேரம் கிடைத்தால் பாருங்கள்.

said...

மிகவும் தவறான அணுகுமுறை. டாவின்சி கோடு எதனால் தடை செய்யப்பட்டது? யார் தடை செய்யக் கோரினார்கள் என்ற தகவல்களை அரசாங்கம் தர வேண்டும். இது போன்ற பத்தாம்பசலித்தனமான செய்கைகளால் அந்தப் படத்துக்குப் புகழ் மேலும் கூடி எல்லாரும் எப்படியாவது திருட்டு ஒரிஜினல் டீவீடியில் பார்த்து விடுவார்கள்.

said...

நன்றி ராகவன் நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரியானதே.

பொழுது போக்கு அம்சங்களிலாவது மதங்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து.

said...

சரியாக சொன்னீர்கள் அருள் மொழி பா.ஜ.கா அரசியலாக்கிவிடும். இதன் மூலம் மேலும் மத துவேஷங்கள்தான் பரவும்.

said...

இன்றய இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி

தடையை நீக்கிவிட்டது சென்ஸார் போர்டு.

செய்தியைப் படித்தீர்கள் என்றால் யார் தடைசெய்யக் கோறுகின்றனர் என்பது விளங்கும்.

//
Joseph Dias, head of the Catholic Secular Forum, began a hunger strike in downtown Mumbai to protest...
//

கதொலிக "செகுலர்" ஃபோரம்!!!

வஜ்ரா ஷங்கர்.

said...

நன்றி ஷங்கர் அது நேற்றைய செய்தி. சென்சார் போர்ட் தடை விளக்கிய பின் தகவல் தொடர்பு மந்திரியகம் மீண்டும் தடை செய்துள்ளது.

said...

நன்றி குமரன்,

பிரியா ரஞ்சன் தாஸ்முன்ஷி ஹுசைன் வரந்த சரஸ்வதிப் படங்களை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், இந்தத் திரைப்படத்தை பிஷப்புகள், கதோலிக்க மத குருமார்கள் சொன்னால் வெளியிடலம் என்ற ஒரு கேவலமான "மதச்சார்பற்ற" நிலையை எடுத்திருக்கிறார். (இவர் தான் Information and Broadcasting minister!!)

இது BJP அரசியலாக்கிவிடும் என்று "கிலி" காட்டுகின்றனர் சில வலைப்பதிவர்கள். அரசியல்வாதி அரசியல் செய்யாமல் "சமயலா" செய்வான்? செய்யும் அரசியல் உருபடியானதாக இருக்கவேண்டும்.

இப்படி வாதிகனே கவலைப்படாத ஒரு விஷயத்தை கேவலமான அரசியல் செய்வது மட்டும் நன்றாக இருக்கிறதா? அதெல்லாம் அரசியல் இல்லையா?

வஜ்ரா ஷங்கர்.

said...

தடை நீக்கப்பட்டிருப்பது மிகவும் சரியான செயல்.

கீமாயணம் எழுதம் அளவிற்குச் சுதந்திரம் கொடுக்கும் நமது நாட்டில் இது போல தடை கோருவது சிறுபிள்ளைத்தனமே.

said...

ஆஹா ஷங்கர் நீங்கள் இந்து மத பற்றாளர் என்பதை அறிகிறேன். நான் இந்தப் பதிவை வெளியிட்டது படம் வாராமல் செய்துவிட்டார்களே என்ற வருத்தத்தில். மற்ற படி மதமே கூடாது என்பது என் கருத்து. அவர்கள் படத்தை தடை செய்தார்கள் இவர் வரைந்த படத்தை தடை செய்யவில்லை என்றெல்லாம் ஒரு மத பிரச்சனை ஆக்கி விடாதீர்கள். மதமே வேண்டாம் என்ற என் பதிவை நேரம் கிடைத்தால் பாருங்கள்.

http://kathalregai.blogspot.com/2006/05/4.html

said...

ராகவன் தடை நீக்கப் படவில்லை. சென்சார் போர்ட் சான்றிதல் அளித்த பிறகு தகவல் தொடர்பு அமைச்சகம் மீண்டும் தடை செய்துள்ளது.

said...

// ஆனால், இந்தத் திரைப்படத்தை பிஷப்புகள், கதோலிக்க மத குருமார்கள் சொன்னால் வெளியிடலம் என்ற ஒரு கேவலமான "மதச்சார்பற்ற" நிலையை எடுத்திருக்கிறார். (இவர் தான் Information and Broadcasting minister!!) //

இப்படி அமைச்சர் பேசியிருப்பாரானால் அவர் முதுகெலும்பைத் தேடலாம். இது முழுப் பேத்தல். அப்படியானால் இனிமேல் எந்த ஒரு மதம் சார்ந்த விஷயத்திற்கும் அந்தந்த மதப் பெரியவர்களிடம் கேட்டு விட்டுத்தான் அரசாங்கம் முடிவெடுக்குமா?

கருணாநிதி அர்ச்சகர் விஷயத்தில் எடுத்த முடிவு சரியென்றாலும்...அவர் என்ன..எல்லாரையும் கேட்டுக் கொண்டா செய்தார்?

said...

//
இப்படி அமைச்சர் பேசியிருப்பாரானால் அவர் முதுகெலும்பைத் தேடலாம். இது முழுப் பேத்தல். அப்படியானால் இனிமேல் எந்த ஒரு மதம் சார்ந்த விஷயத்திற்கும் அந்தந்த மதப் பெரியவர்களிடம் கேட்டு விட்டுத்தான் அரசாங்கம் முடிவெடுக்குமா?
//

இதோ...துடுப்பு

“I will not allow it to be screened unless representatives of Catholic churches and Censor Board watch the movie and clear it. And if anything in the film affects their sensibilities, we will not allow the movie to be screened,” Dasmunsi said.
“Even I’ll watch the film myself in the next 24 hours. I cannot ignore an appeal from a section of the people when there can be merit in what they are saying,” he said.

இவருக்கு முதுகெலும்பு இருக்கிறதா என்று X-ray எடுத்துக் காட்டுங்கள்...யதயவு செய்து.

நான் கேட்டதெல்லாம், இதே போல் இந்துக்களைப் பற்றியும் யோசிக்கவேண்டும் அல்லது வாதிகனே கவலைபடவில்லை, வேலையைப் பார்த்துக் கொண்டு போங்க டா!! என்று இந்த எதிர்ப்பாளர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கவேண்டும்.

சட்டங்களும், ஞாயங்களும் மதத்திற்கேற்றபடி மற்றப்படக் கூடாது. Some are more equal than others மாதிரி ஆகிவிடும் அது.

கருணாநிதி செய்ததை ஆர்ய சமாஜம் பல காலமாக செய்து கொண்டுதான் இருக்கிறது.

//
ஆஹா ஷங்கர் நீங்கள் இந்து மத பற்றாளர் என்பதை அறிகிறேன். நான் இந்தப் பதிவை வெளியிட்டது படம் வாராமல் செய்துவிட்டார்களே என்ற வருத்தத்தில்.
//

ஆம் நான் இந்து தான். நான் இந்து என்பதில் பெருமையும் கொள்கிறேன்.

இது ஒரு திரைப்படம் தானே தவிர, இதில் வெட்டி "மதச்சார்பற்ற" அரசியல் புகுத்தி வோட்டு வாங்க ஏற்பாடு செய்யும் இந்த அரசியல்வாதிகளைத் திட்டியே ஆகவேண்டும்.

உங்கள் கொள்கை உங்களது. உங்களுக்கு மதம் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்.

வஜ்ரா ஷங்கர்.

said...

நன்றி sriram, ராகவன். உங்கள் கருத்து சரி தகவல் தொடர்பு அமைச்சகம் கிறிஸ்துவ பாதிரியார்கள் கொண்ட குழு அமைத்தது சரியல்ல.

said...

சகோதாரர் குமரன் அவர்களே!

நீங்கள் அதனை ஒரு பொழுது போக்கு என்ற அளவில் மட்டுமே காண்கிறீர்கள். ஆனால் அது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையை(மூட நம்பிக்கையல்ல) கேலி செய்யும் விதத்திலும், அவர்களுடைய மனதை புண்படுத்தும் விதத்திலும் இருந்தால் அதனை எப்படி வெறும் பொழுது போக்கு என்று எடுத்துக் கொள்ள முடியும். பார்ப்பவர்களுக்கு அது பொழுது போக்கு. அதனை எடுத்தவருக்கோ பணப் போக்கு. பணம் பண்ண வேறு வழிகள் இல்லையா?

இயேசு(ஈசா)(அலை) அவர்கள் இவ்வுலகின் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பகுதியினரால் மதிக்கப் படும் புனிதராவார். அவர் கூறிய கொள்கைகளை பின்பற்றுகிறார்களோ இல்லையோ, அவரை உயிருக்கு உயிராக இவ்வுலகின் மூன்றில் இரு பகுதி மக்கள் மதிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக கொண்டவர்களும், சுதந்திரமாக பொழுது போக்குபவர்களும் இவர்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் மீது மிதித்து தானா அதனை செய்ய வேண்டும்.

//ஆனால் இந்தியா எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டும் என்று நினைக்கிறது,//

பன்முகத் தன்மை கொண்ட இந்தியா இவ்வாறு நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. நல்ல ஒரு அரசாங்கத்தின் கடமையும் அது தான். தனது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசாங்கங்களை சர்வாதிகார அரசாங்கம் என்றழைப்பார்கள். இந்தியா அவ்வாறு சர்வாதிகார அரசாங்கமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

//பொழுது போக்கு அம்சங்களிலாவது மதங்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து.//

அதனை மத விஷயங்களை பொழுது போக்கு ஆக்கக் கூடாது என ஏன் கூறக் கூடாது?
பொழுது போக்கு அம்சங்கள் வளருவதில் தப்பில்லை. ஆனால் அவை மத விஷயங்களில் தலையிடுவதால் தான் இது போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.

மக்களிடையில் சென்சிடிவ்வான விஷயங்களைக் கொண்டு போனால் வெகு எளிதில் மில்லியன்களில் புரளலாம் என்ற கீழ் தரமான சிந்தனை கொண்டவர்களின் இத்தகைய செயல்களை அனைவரும் சேர்ந்து கண்டிக்கவும், அதனைப் புறக்கணிக்கவும் தயாராக வேண்டும்.

அந்த வகையில் இந்திய அரசாங்கம் எடுத்த இம்முடிவு வரவேற்கத்தக்கதே!

said...

கிறிஸ்தவ அமைப்பு என்ற பெயரில் சர்ச்-ன் அதிகார பூர்வமல்லாத அமைப்பு தடை கோரியிருந்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை .அதே நேரம் அதிகார பூர்வமாக வாடிகனோ அல்லது அதன் அதிகாரத்தில் வரும் பிஷப்புகளோ தடை கோரியிருந்தால் இது அவர்களுக்கு வேண்டாத வேலை .மற்ற இடங்களில் காட்டாத எதிர்ப்பை இங்கு மட்டும் காட்டுவது தேவையில்லாதது.

அதிகாரபூர்வமாக சர்ச் இதை கண்டுகொள்ளாதிருப்பது தான் உத்தமம். எல்லோரும் தங்கள் நம்பிக்கையை ஏர்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் எதிர்பார்ப்பது தவறு.

said...

குமரன் எண்ணம்,
நான் உங்களை கிறிஸ்தவ எதிர்ப்பாளன் என்று கருதவில்லை .அதே நேரம் நான் சொல்லுவதை என் பெயரோடு முடிச்சு போட்டு பார்க்காமலிருக்க வேண்டுகிறேன் .நானும் மதவாதி அல்ல.

said...

இறை நேசன், இந்தப் படம் எப்படி மற்றவர் நம்பிக்கையை கேலி செய்யும் விதமாக உள்ளது என்று எனக்கு புரியவில்லை.

இந்தப் படத்தில் கிறிஸ்துவை தொழுபவர்கள் மூடர்கள் என்றோ யேசு கிறிஸ்துவை ஒரு தவறான வெளிச்சத்தில் காண்பிக்கவோ இல்லை.

அவர் ஒரு மிக சிறந்த மனிதர் ஆனால் அவர் காலத்தின் போக்கில் கடவுளாக சித்தரிக்கப் பட்டார் என்று கூறுகிறார்கள்.

அதுவும் ஒரு சாத்தியம் என்பதை அறிவியல் பூர்வமாக ஆராயும் படம்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு யாருமே இல்லை, கிறிஸ்து அவர்கள் பூமியில் அவதரித்ததால் அவருடைய வாழ்க்கை எப்படி எப்படி இருந்திருக்கலாம் என்று ஆராய்வது இயற்க்கை.

பைபிள் ஒரு வகையாக கூறுவது போல வேறு சில ஆவணங்கள் கூறுவதை படம் காண்பிக்கிறது. அதனை தடை செய்வது மனிதனின் படைப்புரிமையை தடை செய்வதற்க்கு சமம்.

பேச்சுரிமை, எழுத்துரிமை போன்று படைப்புரிமையும் மனிதனின் சொத்து அதனை மதத்தின் பெயரால் தடை செய்வது தவறுதான்.

said...

மன்னிக்க வேண்டும் ஜோ நான் தவறாக எதுவும் பேசி இருந்தால்.

said...

குமரன் எண்ணம்,
தவறு ஒன்றும் இல்லை .ஆனால் ஜோ என்று பெயரைப் பார்த்ததும் எனக்கு நீங்கள் 'கிறிஸ்தவ எதிர்ப்பாளன் அல்ல' என்று சமாதானம் சொல்லத் தேவையில்லை .ஏனென்றால் நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் ,கண்மூடி மதத்தை ஆதரிப்பதில்லை .மதத்தை கழட்டி வைத்துவிட்டுத் தான் என் கருத்தை சொல்கிறேன் .தவறாக நினைக்க வேண்டாம்.

said...

BBC செய்தி

//
"The Holy Koran recognises Jesus as a prophet. What the book says is an insult to both Christians and Muslims," Maulana Mansoor Ali Khan, general secretary of the All-India Sunni Jamiyat-ul-Ulema, told the Reuters news agency.


The Da Vinci Code has generated controversy around the world

"Muslims in India will help their Christian brothers protest this attack on our common religious belief," he said.
//

ஆபிரஹாமிய மதங்களின் கூட்டு....இந்திய அரசாங்கத்தின் கையாலாகத தனத்தின் வெளிப்பாடு.

இன்னிலையில், இரைநேசனின் நிலை, வியப்பளிப்பதாக இல்லை.

வஜ்ரா ஷங்கர்.

said...

ஷங்கர் ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை வெளியிடலாமே உங்களுடைய கருத்துகளிலேயே கோபம் தெரிகிறது. அமைதியாக சொல்ல வந்த கருத்துக்களை வெளியிடலாமே?

said...

our politicians always prove the dictum: more loyal than the king!

said...

குமரன்,

நான் கோபப்படவில்லை. Vatican கூடக் கவலைப்படாத விஷயத்தை, இப்படி அரசியலாக்கி,

சீய்!...என்று வெறுப்பு தான் வருகிறது.

"In God We Trust" என்கிற அமேரிக்காவிலேயே வெளியாகிவிட்டது. இது உறுதியான Box office ஹிட்.

இங்கே தமிழ்மணத்தில் இதனை ஆதரிப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் கூறும் காரணத்தைப் பாருங்கள், சிரிப்பு வரவில்லை?

இதைத் தடை செய்யச் சொல்வது அபத்தம், அதைத் தாங்கிபிடிப்பது அபத்தத்திலும் அபத்தம்...மஹா அபத்தம்.!!

இவர்களைக் கண்டு எனக்கு என்றுமே கோபம் வராது...They are jokers...!

வஜ்ரா ஷங்கர்.

said...

இங்கே மாயவரத்தான் பெயரில் வெளியாகி இருப்பது அவரது கமென்ட் அல்ல. அதனை நீக்கி விடவும்...

said...

நன்றி ரவி சுட்டிக் காட்டயதற்காக..

said...

என்னங்க இது மூலைக்கு மூலை ரோட்டு கடை முதல்
ஷாப்பிங் காம்ளக்ஸ் வரை டாவின் சி கோட் புக் விற்பனை
ஆகிறது அப்பொழுது எல்லாம் இது பற்றி பேசாமல் படம்
வந்த பிறகு தடை அது இது என்று சொல்வது எல்லாம்
சரி இல்லை. இப்பொழுது கூச்சல் போடுகிறவர்கள் அப்பொழுது
எங்கே போனார்கள்,???

அன்புடன்
சரவணன்.இரா

said...

சரவணண் நீங்கள் சொல்வது சரிதான் படத்தில் 2 மணி நேரத்தில் சொல்ல முடியுமோ என்னமொ அவர்கள் சொல்ல வந்த கருத்தை புத்தகத்தில் விளக்கமாக கூறி இருக்கிறார்கள் அதனையும் தடை செய்யச் சொல்லுவார்களா

said...

சந்தேகமில்லாமல் உலகின் முக்கிய வெற்றிப்படமாக இது இருக்கப்போகிறது.

The Passion of the Christ அளவுக்காவது வெற்றிபெறும். அந்தப்படம் வந்தபோது யூதர்களின் எதிர்ப்பை யார் பொருட்படுத்தினார்கள்?
அந்தப்படத்துக்கான யூதர்களின் எதிர்ப்பின் நியாயமளவுக்குக்கூட டாவின்சி கோட் படத்தை எதிர்க்க கிறிஸ்தவர்களுக்குக் காரணமில்லை.
தணிக்கையென்பது நல்ல விசயம் தான். தேவையானதும்கூட. ஆனால் யாருக்காக எதற்காக எதைத் தணிக்கை செய்கிறார்களென்பது முக்கியம். ஒட்டுமொத்தமானவர்களுக்கும் அதனால் என்ன பயன் என்றும் பார்க்கவேண்டும். சும்மா ஒரு கும்பலுக்காக, எந்தத் தேவையுமில்லாமல் தணிக்கை செய்யமுடியாது. இத்தணிக்கையால் யாருக்கு என்ன லாபம்?
படம் வெளிவரவேண்டும். விரும்பாதவர்கள் போய்ப்பார்க்கத் தேவையில்லை.

said...

குமரன்,

நானும் அந்த புத்தகத்தை படித்திருக்கிறேன்.

அது வெறும் கற்பனைக் கதையே. கதைக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத விஷயங்களை வெறுமனே புத்தகத்தின் விற்பனையைக் கூட்டும் வகையில் கதாசிரியர் ஏசுவின் வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கற்பனைகளையும் சேர்த்திருக்கிறார்.

ஆனால் ஒரு ஆங்கில புத்தகம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாகத்திற்கும் ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

உலகம் முழுவதும் திரையிடப்பட்டதே பிறகு ஏன் இந்தியாவில் திரையிட தடை என்று வாதிடுவதில் அர்த்தமில்லை. இந்தியாவில் மதத்திற்கு என்றுமே மக்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறோம். எனக்கோ உங்களுக்கோ மதத்தில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதல்ல முக்கியம். கடவுள் மேலும் மதங்கள் மேலும் ஆழ்ந்த விசுவாசமும் பற்றுறுதியும் கொண்டுள்ள கோடானு கோடி மக்களை (அதுவும் உணர்ச்சிவசப்படக்கூடிய பாமர மக்களை நினைத்துப்பாருங்கள்) அவர்களுடைய நம்பிக்கையைச் சீண்டிப்பார்க்கும் விஷப்பரீட்சை தேவைதானா என்றுதான் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப்பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு பிரபல ஓவியர் இந்த கடவுள்களை நிந்தித்து வரைந்தார் என்பதற்காக அவரையே கொலை செய்ய தூண்டும் அளவுக்கு உணர்ச்சிவசப்படும் மக்கள் வாழும் நாடு நம் நாடு.

பலரும் நினைப்பதுபோல் டாவின்சி கோட் ஒன்றும் இலக்கியதரம் வாய்ந்த புத்தகம் ஒன்றும் இல்லை. ஒரு மூன்றாந்தர புத்தகம்தான். சர்ச்சைக்குரிய விஷயம் எப்போதுமே பிரபலமடைந்துவிடுவதில்லையா? அதுபோல்தான் இதுவும்.

said...

//இந்தியாவில் மட்டும் தடை ஏன்? //


இதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன்!!

said...

சும்மா ஒரு கும்பலுக்காக, எந்தத் தேவையுமில்லாமல் தணிக்கை செய்யமுடியாது//

வசந்தன் தயவுசெய்து இத்தகைய அர்த்தமில்லாத வாதங்களை வைக்காதீர்கள். நீங்கள் வசிக்கும் இடத்தில் திரையிடப்பட்டிருக்கிறதல்லவா. பார்த்து மகிழுங்கள். தேவையில்லாமல் இந்தியாவிலுள்ளவர்களை நினைத்து கண்ணீர் வடிக்காதீர்கள்.

நந்தனுக்கு..

நீங்கள் இந்தியாவில் இல்லாததற்கு இந்தியாவும் வருத்தப்படாது..

சே.. கேவலம் ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா..

அபத்தமான கற்பனையுள்ள படத்திற்கு இத்தனை முக்கியத்துவம் அளிப்பதை நினைத்தால்.. சரி.. விட்டுத்தள்ள்விட்டு வேற ஏதாவது உருப்படியான வேலையை பாக்கலாம்னு நினைக்கிறேன்.

said...

மலேசியாவில் "டாவின்சி கோட்" படம் நாளை (18.05.2006) திரையிடப்படவிருக்கின்றது. இங்கு வெளியிடப்படும் ஒரு ஆங்கில நாளேடு
"படத்தைப் பார்ப்பதற்கு முன் இதைப் படியுங்கள்!" என்று படக்கரு அடிப்படையிலே தவறான ஒன்று எனும் கருத்தை வெளியிட்டுள்ளது.

இதனால், அப்படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

said...

வசந்தன் ஒரு கிறீஸ்துவ எதிரி
;)))

said...

ஒரு படம்தான் மத நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் என்றால், மதங்களின் மீது மனிதனுக்கு நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டதாகவே நான் கருதிகிறேன்!!

said...

இந்தப் பதிவு இவ்வளவு பெரிய சர்ச்சைக்குறிய விசயமாக மாறும் என்று நான் யோசித்துப் பார்க்கவில்லை.

ஜோசப் அவர்களே புத்தகத்தின் தரம் பற்றி நீங்கள் கூறி இருப்பது தவறு.

இந்த நாவல் நன்கு எழுதப்பட்ட நாவல் என்று புத்தக வல்லுனர்கள் பலரும் ஒப்புக் கொண்ட விசயம். உங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறுவதால் அது தரம் தாழ்ந்த புத்தகம் ஆகி விடாது.

எப்பொழுதும் நாம் நம் கருத்துக்களை கூறும் சமயம் சரியான தகவல்களை கூறினால் அந்தக் கருத்திற்க்கு உள்ள மதிப்பு எப்பொழுதும் ஜாஸ்தியாகும். நீங்கள் புத்தகம் தரம் தாழ்ந்தது என்று கூறியிருப்பது உங்களின் நடு நிலைமை இல்லாமையையே காட்டுகிறது.

உங்கள் கருத்துப்படியே ஆங்கிலப் படம் பாமர மக்களை எப்படி பாதிக்கும் என்று கூறுங்கள்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றி புத்தகத்தில் தவறாக எங்குமே சொல்லப்படவில்லை.

ஒரு கால கட்டத்தில் நடந்த சம்பவங்கள் இப்படியும் நடந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்றால் பொறுமை பற்றி பிரச்சாரம் மட்டும் ஏன்?

அப்படி என்ன இந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவை பற்றி தவறாக கூறியுள்ளார்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை.

said...

யோசப் ஐயா,
நான் புத்தகம் வாசிக்கவில்லை.
ஆனால் அதுவொரு "மூன்றாம் தரப்புத்தகம்" என்று நீங்களே சொல்லும் கருத்தை நீங்கள் விரும்பும் வாதத்துக்குத் துணைக்கழைக்கிறீர்கள். அப்படியானால் விவிலியம் எத்தனையாம் தரப்புத்தகம்? டாவின்சி கோட் ஒரு நாவலென்றால், விவிலியமும் ஒரு நாவல்தான். என்னைப்பொறுத்தவரை விவிலியம் நல்ல, சுவாரசியமான, நன்கு கட்டமைக்கப்பட்ட நாவல். அவ்வளவுதான். விவிலியத்தை "ஆதி முதல் அந்தம் வரை" தொடர்ச்சியாக முடித்தவன் என்ற வகையில்தான் சொல்கிறேன். சில பகுதிகளைத்தவிர எங்குமே எனக்குச் சலிப்பு வந்ததில்லை.

நான் பத்தாம் தரப்புத்தகமாகக் கருதும் விவிலியத்தை (இது சும்மா பேச்சுக்கு. ஏற்கனவே விவிலியம் நல்ல நாவலென்று சொல்லிவிட்டேன்.) ஏன் எனக்குக் கட்டாயப்படுத்திப் போதித்தீர்கள் என்பது வரை என் கேள்வி வரும். யாரைக்கேட்டுப் பகிரங்கமாக விவலியம் போதிக்கிறீர்கள்?
யாரைக்கேட்டு பகிரங்கமாக சாமி படம் எடுக்கிறீர்கள், வெளியிடுகிறீர்கள்?
யாரைக்கேட்டு The Passion of the Christ படம் வெளியிட்டீர்கள்? எல்லோரின் சம்மதத்தையும் பெற்றா? பத்துக்கட்டளைகள் யாரைக்கேட்டு?

மூன்றாந்தரப் புனைவைப் படமாக்குகிறீர்களே என்று யாராவது கொதித்தெழுந்தார்களா? அப்படிக் கொதித்தாலும் எந்த அரசாங்கமாவது தடை செய்ததா? (The Passion of the Christ பற்றி இஸ்ரேலின் முடிவு விமர்சனத்துக்குரியதென்றாலும், அது அவர்களின் இனம் சம்பந்தப்பட்டது. தங்கள் இனத்தைக் கேவலமாகக் காட்டுவதான கோபம். அதில் ஓரளவுக்காவது நியாயமுண்டு. பிறகு வந்து இனம் மாதிரித்தான் மதமும் என்று சொல்வீர்களோ? அது தனித்தளத்தில் கதைக்கப்பட வேண்டியது)

கிறிஸ்து மேல் வெறுப்புள்ளவர்களும் கோடிப்பேர் இருக்கிறார்கள்தான். அவர்களைப் "புண்படுத்தி" உங்களால் படம் வெளியிட முடிகிறபோது டாவின்சி கோட்டை வெளியிட என்ன பிரச்சினை?
இயேசு , "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்று சொன்ன மாதிரி
பார்க்க மனசுள்ளவன் பார்க்கட்டும்.
**********************
எனக்கு "இந்தியா" என்ற நாடு பிரச்சினையில்லை. மதத்தைச் சாட்டி நடத்தப்பட்ட அரசியல்தான் பிரச்சினை.
இதைவிட்டு, இந்தியாவில் தடைசெய்யப்பட்டது சம்பந்தமாகப் பேச இந்தியனாகவோ இந்தியாவிலோ இருக்க வேண்டுமென்றால் சொல்ல எதுவுமில்லை.
நான் ரெண்டிலுமில்லை.
**********************
என்னைக் கிறிஸ்தவ எதிரியென்ற பெயரில்லாதவரே!
உங்களை மாதிரியே நகைக்குறிதான் பதில். ;-)

said...

this story is part fictious and part history. the Vatican council I and assembling of selected books forming the present day biblical version - these are all historical and so also many such things are backed by history.

this is nothing but another attempt of our politicians to appease the religious minorities.

said...

பாருங்க தலைவா! கிறிஸ்த்துவுக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் மேரி மாக்தலீனைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வாரிச்ய் உள்ளது. அவர்களது தலைமுறை இன்னும் தொடர்கிறது.
என படத்தில் கூறப்பட்டுள்ளது.
இது எல்லாம் கத்தோலிக்க கிறித்துவர்களின் நம்பிக்கைக்கு எதிரானது.
மேலும் கிறித்துவம் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இது குழப்பத்தை விளைவிக்கும் என கத்தோலிக்க சபையின் பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதான் சார் மேட்டர்.

said...

திரு ரவி அவர்களே:
டாவின்சி கோடில் கொடுக்கப்பட்டுள்ள விஷயம், படித்த ஜோசப் அவர்களையே பாதிக்கும் பொது படிக்காதவர்களை பாதிக்கும் என்பது உங்களுக்கு புரியவில்லையா?
(இது நீங்க அவரை நடு நிலைமை அற்றவர்னு சொன்னதை வைத்து சொல்றன்)
எந்த ஒரு மதத்திற்கும் நம்பிக்கைத்தான் அச்சாணி. அந்த நம்பிக்கையில் குறை சொல்வது அநாகரிகம்.
நமது சகோதரர்களின் உணர்வுகளை மதித்து நமது பொழுதுபோக்கை விட்டு கொடுக்கிறோம்.....அவ்வளவு தான்...

ரொம்ப கவலை படாதீங்க, ஒரு தரணி/ஷங்கர் படம் மிஸ் பண்ரோம்னு நினைச்சிக்கோங்க...That's it...

said...

குமரன்,

ஜோசெப் சொல்வது என்னெவென்றால் அது ஒரு இலக்கிய தரம் உடைய நாவல் அல்ல, அது ஒரு ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட நாவல். ஆம் அது பலராலும் போற்றப் படும் ஜனரஞ்சக நாவல் தான். அதற்காக அது ஒரு இலக்கிய நாவலாகாது. அதே நேரம் இல்லக்கிய தரம் உள்ள நாவல் மட்டுமே படிக்கத் தகுந்தந்தது என்று நான் சொல்லவில்லை. "மூன்றாம் தரம்" என்பது சற்று கடுமையான சாடலே.

அடுத்து டாவின்சி கோட் ஒரு புனைவென்பதை நீங்கள் அறிவீர்கள் தானே! ஒரு புனவு நூலில் கூறப்படும், வரலாற்று நிகழ்வுகளால் அவ்வரலாற்றில் ஆர்வமடைவது இயல்பே, ஆனால் வெறுமனே ஒரு புனைவில் வந்த சான்றுகளை மட்டும் வைத்து அது உண்மையான வரலாறாக இருக்குமென எண்ணுவது மடமை. உண்மையான வரலாறு அறிவதற்கு நீங்கள் அறிவியல் ரீதியாக ஆராயப்பட்ட சான்றுகளை நாடல் வேண்டும்.

said...

//வசந்தன் தயவுசெய்து இத்தகைய அர்த்தமில்லாத வாதங்களை வைக்காதீர்கள். நீங்கள் வசிக்கும் இடத்தில் திரையிடப்பட்டிருக்கிறதல்லவா. பார்த்து மகிழுங்கள். தேவையில்லாமல் இந்தியாவிலுள்ளவர்களை நினைத்து கண்ணீர் வடிக்காதீர்கள்.

நந்தனுக்கு..

நீங்கள் இந்தியாவில் இல்லாததற்கு இந்தியாவும் வருத்தப்படாது.//

ஜோசெப்ஃ, கருத்தைக் கருத்தால் எதிர்ப்பதுவே நல்லது. தனிமனித தாக்குதல் தேவையற்றது.

said...

டி.பி.ஆர். ஜோஸப் அவர்களுக்கு,

"இந்தியாவில் மதத்திற்கு என்றுமே மக்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறோம்".

இந்தக்கூற்று இந்தியாவைப் பொறுத்தவரை இந்து அல்லாத பிற மதங்களுக்கு மட்டுமே applicable-ஆக உள்ளது என்ற கேவல நிலைதான் இது போன்ற பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணமாய் இருக்கிறது.

இந்துக்களை அவமதித்து கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்களை ஆதரிப்பது என்ற ஓட்டுப்பொறுக்கித்தனம்தான் நம் நாட்டில் மத சார்பின்மை என்று பெயரில் வழக்கத்தில் இருக்கிறது. இந்த ஒருதலைப்பட்ச அணுகுமுறையே மனிதர்களுக்கிடையே உள்ள பிளவை அதிகரித்தும் வருகிறது.

"இந்தியாவில் மதத்திற்கு என்றுமே மக்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறோம்".

கிறித்துவ இஸ்லாம் மதங்களை பொறுத்த அளவில் மட்டுமே இது உண்மை. இந்துக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் அவமதிப்பதே மதச்சர்பின்மை என்றும் முற்போக்குத்தனம் என்றும் ஆகி விட்டது.

" ஒரு பிரபல ஓவியர் இந்த கடவுள்களை நிந்தித்து வரைந்தார் என்பதற்காக அவரையே கொலை செய்ய தூண்டும் அளவுக்கு உணர்ச்சிவசப்படும் மக்கள் வாழும் நாடு நம் நாடு".

மக்கள் உணர்வை ஆட்சியாளர்கள் அப்போது மதித்தார்களா என்ன? மாறாக ஓவியக்கண்காட்சிக்கு அனுமதியல்லவா தந்தார்கள். அதனால்தான் சொன்னேன் மத உணர்வுக்கு முக்கியத்துவம் என்பது நம் நாட்டு ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை இஸ்லாமிய, கிறித்துவ மதங்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்து வருகிறது.

அதே சமயம் ராதா, சீதா என்ற பெயரில் லெஸ்பியனிசத்தை காட்டுவது முற்போக்கு என்று முன்வைக்கப்பட்டது என்பதையும் கவனியுங்கள் . (தாக்கரேயின் அப்போதைய ஒரே ஒரு கோரிக்கை: பெயர்களை மட்டும் சபனா, நஜ்மி என்பது போல மாற்றி விட்டு படத்தை வெளியிடுங்கள் என்று - தீபா மேத்தா வாயைத்திறக்கவில்லை, பாத்வா அவர் வாழும் கனடா வரை பாயும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?). அப்படி இருந்தும் கூட இந்துச்சார்பு என்று சொல்லப்பட்ட பாஜக-வால் அந்தப் படம் அனுமதிக்கப்பட்டு ஓடவும் செய்தது.

டா வின்சி கோட் முதல் தர விறுவிறுப்பான கதை, தொடக்க கால கிறித்துவம் குறித்து அறியத்தூண்டும் கதை. இலக்கியமாக இல்லாமல் போனதே அதன் பிரபலத்திற்கும் காரணம். விறுவிறுப்பும் பிரபலமுமே திரைப்படமானதற்கும் காரணம்.
இப்படத்தை எதிர்ப்பது catholic secular forum என்ற முரண்பெயர் கொண்ட (ஆனால் நம் நாட்டு போலி மதச்சார்பின்மையைப் பொறுத்தவரை மிக இயல்பான ஒரு) அமைப்பு.

Fire படத்தை வெளியிட வேண்டும் என்று "முற்போக்கு"க் குரல் கொடுத்த ஷபனா ஆஸ்மி போன்றோரின் எதிர்ப்பு முனகல் கூட இந்த விஷயத்தில் கேட்கவில்லை என்பது இவர்களின் முற்போக்கு முகமூடிக்குப்பின் இருக்கும் மூல ரகசியத்தைத் திரை கிழித்துக்காட்டுகிறது.

சமூக நல்லிணக்கத்தைக்கெடுப்பவர்கள் மத நம்பிக்கையாளர்கள் என்பதை விட இந்து மத உணர்வுகளை மட்டும் selective-ஆக எதிர்த்து பாரபட்சம் காட்டும் இப்படிப்பட்ட முற்போக்கு முகமூடிகளே என்பதற்கு கீழ்க்கண்ட செய்தியே சாட்சி:
Indian Express reports"...Rev. Myron Pereira, a member of the Central Board of Film Certification panel that cleared The Da Vinci Code - with one proviso - said there was no reason to reject the movie. He said the contention that Christ married was "fictional and the film also implies that the Church is covering it up. But it does not portray anything in an obscene fashion. People can protest about anything since we live in a democracy.""

said...

// இந்தியாவில் மட்டும் தடை ஏன்?
//

ஸ்பெயின், கிரீஸ், இன்னும் சில நாடுகளிலும் தடை.

இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரியாமலேயே பலர் விமரிசிப்பது போல தோன்றுகிறது.

இந்த புத்தகத்தை நானும் படித்தேன். இதை எழுதிய டேன் ப்ரொவ்ன், படிப்பவர்களை இழுத்து பிடிப்பது போல கதைக்களம், வர்ணனை அமைப்பதில் வியக்கத்தக்க கில்லாடி (இவருடைய 'தேவதைகளும் சாத்தான்களும்' படித்து பாருங்கள்). புத்தகத்தில் இருப்பது போல படம் வரவில்லையென கேன்ஸ் பட அறிமுக கருத்தில் சொல்லியுள்ளார்கள்.

இயேசு மணம் புரிந்ததுக்கு, டாவின்சி யுடைய கருத்துக்களையும், அவருடைய ஓவியத்தை மட்டுமே ஆதாரமாக கதையில் சொல்லுகிறார்கள். மேலும், பிரதான வாடிகன் கிறிஸ்துவ நம்பிக்கையை மெலிதாக தட்டி விட்டு, ஓபஸ் டீ எனும் ஒரு அமைப்புடய செயல்பாடுகளையும், டாவின்சி தலைமை தாங்கியதாக சொல்லும் 'அறிவாளர்கள்' குரூப்பையும் 'விவகாரமான'தாக விவரிக்கிறார்கள்.

வஞ்சக எண்ணத்தோடு கதை அமைத்திருக்கிறாரா என சொல்ல முடியாவிட்டாலும் வர்த்தக நோக்கு தென்படுகிறது.

எல்லாமே விமர்சனத்துக்கு உரியது என சொல்லுபவர்கள், ஆரோக்கியமான ஒன்றுக்கும், அவதூறு/விஷமம் பரப்பும் ஒன்றுக்கும் ஒரே அளவுகோல் கொள்ள முடியுமா என சிந்திக்க வேண்டும். உதாரணமாக, காந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லா நேரங்களிலும் ஆதரவாக இல்லை என்பதும், தள்ளாத வயதிலும் பெண்பித்தராக இருந்தார் என்பதும், ஒரே விமரிசன அளவுகோல் அடிப்படையில் வருமா?

said...

டாவின்சி கோட் ஏசுவை பற்றி எந்த மோசமான பிரச்சாரமும் செய்யவில்லை.ஏசு கடவுளல்ல,இறைதூதர் பிற்கால கிறிஸ்துவர்கள் அவரை கடவுளாக்கி விட்டனர் என்றுதான் சொல்லுகிறது.

டாவின்சி கோட் சொல்லும் இக்கருத்தை சல்மான் ஏற்கிறாரா,மறுக்கிறாரா?

said...

நேற்று இரவு வீடு திரும்பி விட்டதால் வந்த பின்னூட்டங்களை இன்றுதான் வெளியிட முடிந்தது. அதற்க்கும் மிக நல்ல கருத்துக்கள் பல வெளி வந்துள்ளன அவற்றிற்க்கு என் பதில்கள் இதோ.

வசந்தன் பற்றி வெளியிட்ட அனானி அய்யா/அம்மா நீங்கள் சொல்வது சரி, தனி மனித தாக்குதல் எந்த அளவிற்கு சென்று முடியும் என்று தமிழ்மணம் கண்டுள்ளது ஆகவே உங்கள் கருத்து சரியே

மற்றொரு அனானி அய்யா/அம்மா உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அது இலக்கிய தரம் வாய்ந்த நாவல் என்று நான் கூறவில்லை நன்கு எழுதப்பட்ட நாவல் என்றே கூறுகிறேன்.அது புனை நாவல் மட்டும் அல்ல படத்தில் கூட என்று போடுகிறார்கள் ஆகவே இது உண்மை என்று யாருமே கூறவில்லை. இந்த சம்பவங்கள் இப்படியும் இருக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

வெட்டிபயல் அவர்களே யாருடைய நம்பிக்கைக்கும் பாதமாக எழுதப்படவில்லை. இந்த சம்பவங்கள் இப்படியும் நடந்து இருக்கலாம் என்றுதான் கூறப்படுகிறது. படம் மிஸ்ஸான வருத்தம் தான் முதலில் இருந்தது இப்பொழுது இப்படி ஒரு மத சர்ச்சையை உருவாக்கிவிட்டதே என்றும் வருத்தம் இருக்கிறது.

அருணகிரி அவர்களுக்கு இப்பொழுது நடக்கும் சர்ச்சையை விட பல மடங்கு சர்ச்சை அப்பொழுது நடந்தது இந்த சம்பவத்தைவிட அந்த சம்பவத்தால்தான் வெட்கக்கேடு. இப்பொழுதும் நிரந்திர தடை இல்லை பயர் படத்தைவிட கம்மியான சர்ச்சைகளுடன் படம் வெளிவரும்

ஸ்பென், கிறீஸிலும் தடையா? தகவலுக்கு நன்றி சல்மான். நான் டான் பிரவுன் எழுதிய நான்கு நாவல்களையுமே படித்து இருக்கிறேன், நீங்கள் கூறுவது சரியே. ஒவியத்தை மட்டும் அல்ல வேறு பல ஆதாரங்களையும் கொடுத்து இருக்கிறார்.

நான் அந்த ஆதாரங்களை ஆராய்ந்து எழுதிய பதிவை பாருங்கள்.

http://rasithathu.blogspot.com/2006/04/blog-post_25.html

said...

வசந்தன் பற்றி வெளியிட்ட அனானி அய்யா/அம்மா நீங்கள் சொல்வது சரி, தனி மனித தாக்குதல் எந்த அளவிற்கு சென்று முடியும் என்று தமிழ்மணம் கண்டுள்ளது ஆகவே உங்கள் கருத்து சரியே

அட தேவுடா! தமிழ்மணத்துலே சார்காசம் (தமிழ் என்னங்க?) என்கிறதே செத்துப் போச்சுதாடா!!

said...

ஜோசப் சார்,
இந்த படத்தை சர்ச்சையாக்காமல் விட்டிருந்தால் பெரும்பான்மையானவர்கள் இதை கண்டுகொள்ளப் போவதில்லை .ஆனால் இதை ஒரு சர்ச்சையாக்கி இதில் என்னவோ இருக்கிரது என்ற ஆவலைத் தூண்டி பலரை பார்க்க வைக்கப் போகிறார்கள் .கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு இது எதிராக இருக்கலாம் .ஆனால் யாரோ ஒருவர் அவர் கற்பனையைச் சொல்கிறார் .அதை பார்த்து ரசிப்பவர்கள் ரசித்து விட்டு போகட்டும் என்று விட்டுப் போக வேண்டியது தானே ? ஏன் இதை பெரிது படுத்து இந்த கற்பனைக்கு விளம்பரன் தேடிக்கொடுக்க வேண்டும்?

said...

ஜோ நீங்கள் கூறுவது சரி தேவை இல்லாத விளம்பரம் செய்து விட்டார்கள். 10 நாட்கள்தான் ஓடி இருக்கும் என்னைப் போன்று புத்தகம் படித்தவர்கள் மட்டும்தான் பார்த்திருப்பார்கள். இப்பொழுது தேவையில்லாத விளம்பரம் படத்திற்க்கு.

அனானி அம்மா/அய்யா நீங்கள் கூறுவதைத்தான் நானும் கூறுகிறேன், யேசு கிறுஸ்து பற்றி தவறாக ஒரு பக்கத்தில் கூட எழுதவில்லை பின் ஏன் இந்தக் கூச்சல்?

மற்றொரு அனானி அம்மா/அய்யா உங்களுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

said...

"இப்பொழுது நடக்கும் சர்ச்சையை விட பல மடங்கு சர்ச்சை அப்பொழுது நடந்தது இந்த சம்பவத்தைவிட அந்த சம்பவத்தால்தான் வெட்கக்கேடு".

உண்மையில் வெட்கக்கேடு என்ன தெரியுமா? முகமூடி அணிந்த முற்போக்கு வேஷங்களின் மதச்சார்பின்மை கோஷங்கள்தாம். செட்லாவாட், ஷபனா ஆஸ்மி போன்ற "முற்போக்கு"வாதிகளின் எதிர்ப்பு முனகல் இந்த விஷயத்தில் இன்று எங்காவது கேட்கிறதா என்று காது கொடுத்துக்கேளுங்கள்.

"பயர் படத்தைவிட கம்மியான சர்ச்சைகளுடன் படம் வெளிவரும்.."

வரவேண்டும் என்பதே விருப்பம். ஆனாலும் பயர் படத்தை விட கம்மியான சர்ச்சை என்று சொன்னதால் மட்டுமே ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்-ஒரு பொழுது போக்குப்படம் எடுத்து அதில் ஓரினச்சேர்க்கையாளராக ஜீசஸ் என்ற பெயரில் ஒருவரைப் போட்டால் இந்தியாவில் அந்தப் படம் வெளி வர முடியுமா- சர்ச்சையுடன் கூட?

said...

அருணகிரி நீங்கள் கூறுவது போல கருத்து சுதந்திரம் பற்றி இப்பொழுது யாரும் குரல் கொடுக்கவில்லை என்பது நெருடலான விசயம்தான்.

ஆனால் யேசு கிறிஸ்து மதலான் அம்மையார் உடலுறவு கொள்வது போல லாஸ்ட் டெம்ப்டேசன் ஆப் கிறிஸ்து( Last temptation of christ ) என்று ஒரு படம் வந்துள்ளது, 1980களில் வந்தப் படம் அந்தப் படம் இந்தியா வெளிவராத காரணம் ஆங்கில படங்கள் அந்த கால கட்டத்தில் வெகுவாக வெளிவராததே

said...

my comment on the book, the factual and fictious sides of the books as i saw,is here.

said...

"( Last temptation of christ ) என்று ஒரு படம் வந்துள்ளது, 1980களில் வந்தப் படம் அந்தப் படம் இந்தியா வெளிவராத காரணம் ஆங்கில படங்கள் அந்த கால கட்டத்தில் வெகுவாக வெளிவராததே"

இது கதை. இந்தக்கால கட்டத்தில்தான் நான் பல ஆங்கிலப்படங்கள் பார்த்தது, உச்சரிப்பு புரியாமல் அவதிப்பட்டது எல்லாமே. 80களில் நான் மிகவும் ரசித்த ஆங்கிலப் படம் "Ten commandments"- கொடுத்த காசுக்கு வஞ்சனையின்றி 3 மணி நேரம் ஓடும் மாயாஜாலப்படம் என்ற விதத்தில் நன்றாகவே ஓடியது. இப்போது ஆங்கிலப்படங்கள் மேலும் பலமடங்கு அதிகரித்து விட்டதோ என்னவோ.

விஷயம் அதுவே இல்லை. Last Temptation படம் வெளியிட்டிருக்க வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்குள்ளேயே நான் போகவுமில்லை. இந்தியாவில் போலி முற்போக்குகள் மதச்சார்பின்மை என்ற பெயரில் போடும் இரட்டை வேடத்தை வெளிச்சம் போடவே விரும்பினேன்.

மற்றபடி விறுவிறுப்பான காட்சிகள் இருந்தாலன்றி இந்தியாவில் இந்தப்படம் ஓடாது. Puzzle solving-தான் புத்தகத்தில் விறுவிறுப்பே- அது புத்தகம் படிக்காத மிகப்பெரும்பான்மை மக்களுக்கு (கிறித்துவர் உட்பட) புரியவும் புரியாது, சுவாரஸ்யமாகவும் இருக்காது.

(புதுசெய்தி: இந்தப்படத்தில் கொலைகாரன் ஒரு அல்பினோ ("சிவப்புக் கண்ணன்")- இதனை எதிர்த்து National Oraganisation for Albinism and Hypo pigmentation (NOAH) என்ற அமைப்பு குரல் கொடுத்துள்ளது).

said...

தாவின்ஸி கோட் இப்போது வந்த புத்தகம். நூற்றாண்டு முன்னாடி பாரதி எப்படிப் பாடியிருக்கிறான் பாருங்கள்:
உண்மை என்ற சிலுவையில் கட்டி
உணர்வை ஆணித்தவம் கொண்டு அடித்தால்
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்
பெண்மை காண் மரியா மக்தலேநா
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து

நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியில் இஃது பயின்றிடல் ஆகும்.
- நிரஞ்சனா

said...

இது பல நூற்றாண்டுகளாக உள்ள சர்ச்சைதான் நிரஞ்சனா உண்மையில் சொல்வதென்றால் இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய் என்று யாராலும் ஒதுக்கி விட முடியாது என்பது பல வல்லுனர்களின் கருத்து.இது பற்றி என் அறிவுக்கு எட்டிய வரை நான் எழுதிய கருத்துக்களை இங்கு காணலாம்.

http://rasithathu.blogspot.com/2006/04/blog-post_25.html

said...

please visit http://arulosai.blogspot.com

thanks