Monday, May 29, 2006

சுப்ரீம் கோர்ட் கோரிக்கையும் என்னுடைய கருத்துக்களும்

சுப்ரீம் கோர்ட் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடி வரும் மாணவர்களுக்கு போராட்டத்தை கைவிட சொல்லி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அரசு எடுத்த முடிவை பரிசீலனை செய்ய வழியுறுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு பற்றி பலர் பல கருத்துக்களை சொல்லிவிட்டதால் நான் மேலும் அதனைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

எனக்குள் இருக்கும் கேள்விகள் இந்த போராட்டம் நடத்தும் மாணவர்களைப் பற்றியதுதான்.

அவர்கள் போராட்டம் நடத்த தகுதியானவர்கள்தானா?

பெற்றோரிடம் பாக்கெட் மணி வாங்கிக் கொண்டு, டிஸ்கோதே, பார் என்றும் கேர்ள் பிரண்ட்ஸ், கேசுவல் செக்ஸ் என்று சுத்தி கொண்டிருப்பவர்களுக்கு கிராமப் புறங்களில் இருக்கும் மக்களைப் பற்றியும், இன்றும் பலவாறு பின்தங்கி இருக்கும் மக்களின் நிலை நிஜமாகவே தெரியுமா?

இவர்கள் பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் பற்றி முழுவதும் புரிந்து கொள்ளாமலேயே போராட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் அவர்கள் செய்வது சரி தவறு என்று கூறவில்லை, பிரச்சனையை முழுவதுமாக புரிந்து கொள்ளாமலேயே போராட்டம் நடத்துகிறார்களோ என்று சுப்ரீம் கோர்ட் போலவே வியக்கிறேன்.

4 comments:

said...

ஏன் குமரன். அதனால் பாதிப்படையக் கூடிய நிலமையில் இருப்பதால் அவர்கள் போராடுவதாகக் கூட இருக்கலாமே. அதில் எத்தனையோ பேர், என்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளினால் கிராமங்கள் பற்றி அறிந்து இருக்கலாமே. போராடுபவர்களில் எத்தனை பேர் கிராமத்திலிருந்து வந்தவர்கள் எனத் தெரியுமா?

//பெற்றோரிடம் பாக்கெட் மணி வாங்கிக் கொண்டு, டிஸ்கோதே, பார் என்றும் கேர்ள் பிரண்ட்ஸ், கேசுவல் செக்ஸ் என்று சுத்தி//
நீங்கள் இப்படிப் பொதுப்படுத்துவது சரியா?

நீங்கள் கூறியது போலவே இது இட ஒதுக்கீடு பற்றிய எனது கருத்தில்லை. உங்கள் பதிவு பற்றிய கருத்து மட்டுமே.

said...

உங்கள் கருத்துக்கு நன்றி இலவசக் கொத்தனாரே!! நான் மும்பையில் 2 1/2 வருடங்கள் இருந்திருக்கிறேன். நான் பொதுப் படுத்தி சொல்வது தவறில்லை என்பதை பலர் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் கூறியது போல என்னுடைய கருத்துக்கள் தவறாக கூட இருக்கலாம் ஆனால் நான் கண்ட வரை என் எஸ் எஸ் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாய் இருந்தால் அவர்களுடைய கருத்துக்கள் இப்படி இருந்திருக்காது என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

என்னுடைய கருத்து அவர்கள் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல் போராடுகிறார்கள் என்பதே.

said...

//பெற்றோரிடம் பாக்கெட் மணி வாங்கிக் கொண்டு, டிஸ்கோதே, பார் என்றும் கேர்ள் பிரண்ட்ஸ், கேசுவல் செக்ஸ் என்று சுத்தி கொண்டிருப்பவர்களுக்கு கிராமப் புறங்களில் இருக்கும் மக்களைப் பற்றியும், இன்றும் பலவாறு பின்தங்கி இருக்கும் மக்களின் நிலை நிஜமாகவே தெரியுமா? //

இது ஒரு அரைவேக்காட்டுத் தனமான கருத்து. ஒரு தலைமுறையையே கொச்சைப் படுத்துவது போல் இருக்கிறது.

நீங்கள் மும்பையில் 2 1/2 வருடம் இருந்ததாக கூறுகிறீர்கள். அப்படியென்றால், தினமும் Barக்கும், Bar dance girls கூடவும் பொழுதைக் கழித்தவர் என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?

said...

அனானி அம்மா/அய்யா நான் மும்பையில் உள்ள கலாச்சாரத்தை நேரில் கண்டுள்ளேன் என்று சொல்ல வந்தேன். உங்களுக்கு நான் அவர்களை இழுவுபடுத்துவது போல கருத்து வெளியிட்டுள்ளதாக தோன்றுகிறது ஆனால் இதே கருத்தை நான் அந்த மாணவர்களிடம் சொல்லி இருந்தால் அதனை அவர்கள் இழுவுபடுத்துவதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் ஏனெனில் அது அவர்களில் லைப் ஸ்டைல்.

மற்றும் நான் கூறுவதை திரித்துக் கூற வேண்டாம் பார் கேர்ள்ஸுடன் சுற்றுகிறார்கள் என்று கூறவில்லை கேர்ள் பிரண்ட்ஸுடன் சுற்றுகிறார்கள் என்றுதான் கூறியுள்ளேன்.

மற்றும் பார், டிஸ்கோதே, கேசுவல் செக்ஸ் எல்லாம் நீங்கள் கூறுவது போல இழிவானதல்ல நானும் இழிவானது என்று கூறவில்லை அது அவர்களின் லைப் ஸ்டைல், அப்படிபட்ட லைப் ஸ்டைல் கொண்டர்வர்கள் இது போன்ற பிரச்சனைகளை புரிந்து கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு என்பதே என் கருத்து.

நான் யாரையும் இழுவுபடுத்த கூறவில்லை புரிந்து கொள்ளுங்கள் மற்றும் அனானியாக வந்து கருத்து சொல்லாமல் பெயர் வெளியிட்டே சொல்லவும்.

என் வாதம் உங்களுக்கு இப்பொழுது விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.