இன்னா செய்தாரே ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செயது விடல்
பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர் தெய்வப் புலவர் என்று அறியப் படுவதில் ஆச்சர்யம் இல்லை. காலத்தை வென்று விட்டது குறள் என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை. இன்று நம் வலைப் பதிவாளர்களுக்காக கூட குறளை விட்டுச் சென்றிருக்கிறாரே.
ஒரு விவாததில் எனக்கு பிடித்த வலை பதிவாளர் ஒருவர் என்னிடம் ஒருவருடைய பதிவுகளுக்கு எப்படி வேண்டுமானாலும் பதில் சொல்லலாம் என்று எனக்கு பதிலளித்துள்ளார். அவருக்கு இந்த இடுகை சமர்ப்பணம்.
என் ஆன்மீக குரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் சில சிந்தனைகளோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
பிறருக்கு மனதாலும் துன்பம் நினையாதே.
குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.
துன்பம் போக்கும் தூயநெறியே அன்பாம். அறமாம் அறிவின் உயர்வாகும்.
உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.
உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.
ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள், உள்ளுணர்வு பெற்றோர்கள், உடல்நலமும், மனவளமும், உயர்அறிவும் பெறுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//"வலைப் பதிவாளர்களுக்கு ஒரு குரல்(றள்)" //
டப்பிங் ஆர்டிஸ்களெல்லாம் உங்களுக்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். சங்கத்துல சேராமாக தன்னிச்சையா குரல் கொடுத்து அவுங்க பொழப்புல மண்ணைப் போடுறிங்களாம். :)
கோக்க மொக்கா...
உங்க அழும்பு தாங்க முடியலை கோவி கண்ணன்...
அது எந்த விவாதம் என்று எப்படி தெரிந்துகொள்வது ??
நமீதா பற்றிய விவாதமா ? அப்படியென்றால் தெரிந்துஜொள்ள ஆசை...
நீங்க கேட்டா நாங்க சொல்லிடுவோமா? அதுதான் சஸ்பென்சே
Post a Comment