Friday, June 30, 2006

வலைப் பதிவாளர்களுக்கு இன்னும் சில குரல்(றள்)கள்

நான் ஒரு வலைப் பதிவாளருக்கு வெளியிட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை. காலையில் வெளியிட்டது. அது வெளியானாலும் வெளியாகாவிட்டாலும் கவலையில்லை அவருக்காக சில குரல்(றள்)கள்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

நடு நிலைமை தவறியதால் நமக்கு பலன் கிடைக்கும் என்றாலும் நாம் நடு நிலைமை வழுவக் கூடாது.(விளக்கம் சரி என்றுதான் நினைக்கிறேன் தெரிந்தவர்கள் கூறவும்).

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி-இருப்பக் காய் கவர்ந்தற்று

10 comments:

said...

//இனிய உளவாக இன்னாத கூறல்
கனி-இருப்பக் காய் கவர்ந்தற்று//

இனிய உளவாக இன்னாத கூறல்
சனியிருந்து மீளாத நாக்கு !

said...

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை
தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
- மு, வரதராசனார்

said...

கோவி. கண்ணன் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே?

நாகை சிவா விளக்கத்திற்கு நன்றி

said...

குமரன்,
திருக்குறள் நல்லா இருக்கு. தூங்கிட்டு இருந்ததுனால பின்னூட்டத்தை போட முடியலை எழுந்த உடனே அதை போட்டுட்டேன்..

said...

குமரன் நீங்கள் உண்மையை உரக்க சொல்வது அவர் கண்களுக்கு எட்டி இருக்குமோ....

said...

சந்தோஷ் நீங்கள் பின்னூட்டம் வெளியிட்டிருந்தாலும் குறள் சொல்லிதான் இருப்பேன். தவறாக எண்ண வேண்டாம் எதோ எனக்கு தோணிணதை சொல்றேன் பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்.

said...

குமரன்,
இதில் தவறாக எண்ணுவதற்கு எதும் இல்லை. என்னுடைய நோக்கம் கண்டிப்பாக தனிமனித தாக்குதல் கிடையாது. அது எங்கே அதுமாதிரி மாறி விடுமோ என்று பயந்தே நான் யாருடைய பின்னூட்டத்திற்கும் பதில் அளிக்க வில்லை.. நான் வந்த பின்னூட்டங்களில் 3/4 பின்னூட்டங்களை தான் வெளியிட்டுள்ளேன். அநாகரீக மற்றும் தனிமனித தாக்குதல் சம்மந்தமாக, மற்றும் இந்த பதிவிற்கு சம்மந்தம் இல்லாத பல பின்னூட்டங்களை நான் அனுமதிக்க வில்லை.. இது தான் உண்மை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பது அந்த வீடியோ பின்னூட்டம் என்று நினைக்கிறேன் சரியா?

said...

கருத்து சொன்னா தலையாட்டனும் கேள்வியெல்லாம் கேட்கப்படாது...
***********
குரளுக்கு குரள் வடிவில் கொடுத்த விளக்கம் இதோ ...


சிலருக்கு நாக்கில் சனி ... அவர்கள் எதையும் நல்லதாக சொல்வது இல்லை .. அதைத்தான் இனிமையான சொற்கள் இருக்கும் போது அதைவிட்டு இட்டுக்கட்டி இல்லாததைப் பேசுவர்கள் ... சனியை நாக்கில் நிறந்தரமாக குடிவைத்திருப்பவர்கள் என்று சொன்னேன்

*******
திரு குமரன் எண்ணம் என் எண்ணம் பிரிந்ததா ?
இதுமாறி நெறைய குரளு வெச்சிருக்கேன் அப்பபப் எடுத்துவுடுறேன் ...

said...

சந்தோஷ் அது மட்டும் இல்லை பல இடங்களில் நீங்கள் அவரை கீழே இறக்கி வைத்து பேசுவது எனக்கு சரியல்ல என்று பட்டது. மற்றும் அந்த பதிவின் நோக்கத்திலும் எனக்கு ஒப்பவில்லை ஆனால் உங்கள் கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு.

said...

அடி ஆத்தி ஏதோ வெவாகாரம் போல... அத தெரியாம சனி கினி என்னென்னுமோ சொல்லிப்புட்டேனே... மகாஜெனங்களே ... குமரன் குரளுக்கு வெளக்கம் மட்டும்தான் கொடுத்தேன் ... அவர் கொரளுக்கு கொரள் கொடுக்கலே ... ஆப்போட அப்ப வந்துடாதீக ... நமக்கு நக்கல் நையாண்டி மட்டும் தான் வரும் சிக்கல் சிண்டு முடியரது வரேவே வராது ....