Monday, January 22, 2007

மார்டீனா ஹிங்கிஸ்

தினமும் 8 மணிக்கு எழுந்து அவசர அவசரமாக அலுவலகம் செல்ல துவங்கும் என்னை சில நாட்களாக 5.30 மணிக்கு எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி.

இன்று அதிகாலை எழுந்து டென்னிஸ் போட்டியில் ஒரு அதிமேதாவியாக என்னால் கருதப்படும் மார்டீனா ஹிங்கிஸினுடைய போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

பெண்கள் டென்னிஸ் போட்டி என்பது இன்று வலிமையான பெண்களின் பிடியில் இருக்கிறது. இன்று உலகத் தர வரிசையில் முதல் 20 இடங்களை எடுத்துக் கொண்டால் ஷரபோவா, மொரிஸிமோ, ஹெனின் என்று எல்லோருமே உடல் வலிமை, டென்னிஸ் பந்தை வலிமையாக திருப்பி அடிக்கும் திறன் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

எனக்கு கிரிஷ் எவர்ட் போல நளினமாக விளையாடும் பெண்களையே அதிகம் பிடிக்கும். ஆனால் அவர் காலத்தில் முதல் 20 இடங்களில் 15 பெண்கள் நளினமான முறையில் விளையாடுபவர்களாகவே இருந்தார்கள்.

இன்று fore handகளுக்கும் back handகளுக்கும் நடக்கும் பலப்பரிட்சைகளில் நளின ஆட்டக்காரர்கள் மிக குறைந்து போய் விட்டார்கள்.

இன்று மெல்ல மடிந்து கொண்டிருக்கும் இந்த ரக விளையாட்டு வீரர்களில் குறிப்பிடத்தக்க அளவில் தர வரிசையில் இருப்பவர் ஹிங்கிஸ் ஒருவரே.

இன்று நடந்த போட்டியில் லீ நா என்ற சீன வீராங்கனையுடன் போட்டி இட்டார்.

முதல் செட்டில் 98% முதல் சர்வீஸ்களை சரியாகப் போட்ட லீ நா தன்னுடைய forehandஐயும், backhandஐயும் விட்டு விளாசியதுக் கண்டு மனம் தளர்ந்து மீண்டும் போய் தூங்கலாமா என்று மனதுக்குள் ஆலோசனை செய்து சரி அடுத்த ஒரு செட்டையும் பார்ப்போம் என்று உட்கார்ந்திருந்தேன்.

Law of averages என்ற விதிப்படி லீ நா தன்னுடைய முதல் சர்வீஸ்களில் சில தவறுகளை செய்யத் துவங்க தற்பாதுகாப்பாக ஆரம்பித்து எதிராளி தவறு செய்யும் வரை பந்தை எல்லைக் கோடுகளுக்குள்ளே வைத்து விளையாடத் துவங்கினார் ஹிங்கிஸ்.

அவ்வப்போது கொஞ்சம் அதிக தற்பாதுகாப்பாக ஆடத் துவங்கி சில மின்னல் வேக forehandஐயும், backhandஐயும் சந்திக்க வேண்டியதாகி விட்டது ஹிங்கிஸுக்கு ஆனால் அவருடைய களத்தில் மூளையை உபயோகித்து விளையாடும் திறன், எதிராளிக்கு எப்போதுமே சுலபமாக ஒரு பாயிண்டைக் கூட விட்டுத் தராத திறன் ஆகியவற்றால் போராடி வெற்றி பெற்றார்.

அடுத்து கிம் கிளைஸ்ட்ஜர்ஸுடனான போட்டி. போன தடவை கால் இறுதியில் இவரிடம் தான் தோற்றுப் போனார் ஆனால் இந்த தடவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெட்டராக இருக்கும் ஹிங்கிஸ் ஜெயிப்பார் என்றே நம்புகிறேன்.

0 comments: