Thursday, November 23, 2006

பிடித்த வில்லன்கள்

வில்லன்கள் விஜயகாந்த் படத்தில் வரும் ஆஜானுபாகுவான வில்லன்களில் இருந்து மகாபாரத சகுனி வரை வில்லன்கள் பல விதம்.

பலம் பொருந்திய வில்லன்கள்(தமிழ் சினிமாவில்), பயங்கர அறிவாளியான திட்டங்கள் தீட்டும் வில்லன்கள்(சகுனி போன்றவர்கள்), குறுக்கு வழியில் சென்று பணம் சம்பாதிக்கும் வில்லன்கள் என்று பல வகையாக பிரிக்கலாம்.

சில சமயங்களில் படைப்புகளில் வில்லன்கள் ஹீரோக்களை விட வசீகரிக்கும் வகையில் அமைந்து விடுவார்கள். அமைதிப் படை அல்வா சத்யராஜ், பரட்டை ரஜினி போன்ற கதாபாத்திரங்கள் காலத்திற்கும் அழியாத வில்லன்கள்.

அது போல எனக்குப் பிடித்த வில்லன்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

நந்தினி(பொன்னியின் செல்வன்) - பொன்னியின் செல்வனின் எனக்கு மிகவும் பிடித்தது பாத்திரப் படைப்புளே நந்தினியின் புரிந்து கொள்ள முடியாத பாத்திரம் மிகவும் பிடிக்கும்.

Darth vader(Star wars) - Revenge of the sith படத்தில் முதல் முறையாக Anakin Skywalker, Darth vader உடைய உடை பூண்டு மூச்சை வித்தியாசமாக விடும் சமயத்தில் உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. I am your father என்று Empire strikes back படத்தில் இவர் சொல்லும் சமயம் ஸ்டார் வார்ஸ் கதையே 360 டிகிரி சுற்று வந்தது.

தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் பாத்திரம்( பெயர் தெரியவில்லை ) - நாகேஷ் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்று சொன்னால் பொய்யில்லை.

Lord Voldermort - சுத்தமான அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட தீய சக்தி. இவர் பெயரைக் கூட மக்கள் சொல்ல பயப்பட்டு இவரை he who must not be named என்று தான் அழைப்பார்கள்.

Dark phoneix(XMen) - பிடித்த கார்ட்டூன் வில்லி. ஜீன் என்ற சாதுவான பெண்ணுக்குள் இருக்கும் ஒரு பயங்கரமான ஒரு சக்தி கொண்ட வில்லி. Mutantsகளிலேயே சக்தி வாய்ந்த Mutant Dark phoneix தான்.

உங்களுக்கு பிடித்தவர்களையும் வில்லன் கதாபாத்திரங்களை சொல்லுங்கள்.

1 comments:

said...

நீங்கள் கூறியதில் வோல்டமொர்ட் எனக்கும் பிடித்த வில்லன்...அடுத்த படம் எப்பொழுது வரும் என காத்திருக்கின்றேன்..