Thursday, April 20, 2006

தெய்வீக எண்

1.618 தெய்வீக எண் - டிவைன் பிரபோர்சன்( Divine Proporition )

தெய்வீக எண்ணா என்ன குழப்புகிறான் என்று எண்ணுகிறீர்களா?

விளக்குகிறேன்.

உங்களிடம் உள்ள எதெனும் ஒரு அளவுகோலை எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் உங்கள் முழு நீளத்தையும் அளந்து கொள்ளுங்கள்
பின் உங்கள் தொப்புள் கொடியில் இருந்து உங்கள் கால் நுனி வரை அளக்கவும்.

இந்த இரண்டு நீளங்களையும் வகுத்தால் என்ன எண் கிடைக்கும் என்று நான் கூறாமலே உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

எல்லா மனிதர்களுக்கும் இந்த இரண்டு நீளங்களை அளந்தால் 1.618 என்றே இருக்கும்.

இது மட்டும் அல்ல நான் கீழே கூறி இருக்கும் எல்லாமே எல்லா மனிதர்களுக்கும் ஒன்றாகவே இருக்கும்.

கை நடு விரலிலுந்து தோள் வரை அளந்து கொள்ளுங்கள்.
பின் உங்கள் கை நடு விரலிலுந்து உங்கள் கை மடங்கும் இடம் வரை அளந்து கொள்ளுங்கள்.
வகுத்து பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொள்ளுங்கள்.

மேலும்

இடுப்பில் இருந்து கால் நுனி வரை - கால் மடங்கும் இடத்தில் இருந்து கால் நுனி வரை,
விரல் நீளம் - விரல் மடங்கும் இடம் வரை
உங்கள் மூக்கின் நீளத்தை, உங்கள் கண் திறந்து இருக்கும் சமயம் உள்ள நீளத்துடன்.

இப்படி உங்கள் உடலில் உள்ள பல அளவுகள் 1.618 என்ற எண்ணின்படியே அமைத்து இருக்கும்.

இது மட்டும் அல்ல.

எந்த ஒரு தேன் கூட்டிலும் பெண் தேனீக்களின் எண்ணிக்கையை ஆண் தேனீக்களின் எண்ணிக்கையோடு வகுத்தால் கிடைக்கும் எண் 1.618.

இப்படி இந்த எல்லா நடக்கும், பறக்கும், நீந்தும் விலங்குகளில் இருந்து, தாவரங்கள் வரை அதனுடய உடல் கூறுகளை இந்த எண்ணின்படியே அமைந்து இருக்கும்.

ஆகவேதான் இந்த எண் தெய்வீக எண் என்று கூறப்படுகிறது

இந்த எண்ணில் அடிப்படையிலேயே பிரமீடுகளும் அமைக்கப் பட்டுருக்கின்றன.

எதற்காக இந்த எண் பற்றிய பதிவு?

டாவின்சி கோட் பற்றி எழுதும் முன் இந்த எண் பற்றி சொல்ல எண்ணினேன்.

இந்த எண் டாவின்சி கோடில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டாவின்சி கோட் பற்றி அடுத்த பதிவில்.

http://en.wikipedia.org/wiki/Divine_proportion visit this for more info on divine proportion.

1 comments:

said...

இது வரை கேள்விப்படாத விஷயம் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.