Thursday, April 20, 2006

வேதாத்திரி மகரிஷி

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி 28/03/2006 அன்று இன்னுலகை விட்டு பிரிந்தார்

பிறருக்கு மனதாலும் துன்பம் நினையாதே என்று போதித்த மகரிஷி நாம் வணக்கம் கூறுவது போல உள்ளன்போடு " வாழ்க வையகம், வாழ்க வளமுடன் " என்று கூறும் பழக்கம் கொள்ள வேண்டும் என்று போதனை செய்துள்ளார்.அவருடைய சில கருத்துக்களை இங்கு பிரசரித்துள்ளேன் படிப்பதோடு அவற்றை வாழ்க்கையிலும் கடை பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.

இன்பத்தை முறையோடு அளவுடன் அனுபவிக்க துன்பமே பெரும்பாலும் தோன்றாது ஆராய்ந்துணர்வீர்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.

துன்பம் போக்கும் தூயநெறியே அன்பாம். அறமாம் அறிவின் உயர்வாகும்.

ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள், உள்ளுணர்வு பெற்றோர்கள், உடல்நலமும், மனவளமும், உயர்அறிவும் பெறுவார்கள்.

எதிர்பார்த்தல் எனும் நோயை மாற்றி மனநலம் காண எது உளதோ அதை ஏற்று உதவி செய்தே வாழ்ந்திடுவோம்.

குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.

http://vethathiri.org/tamil/swami/quotations/document_view

1 comments:

said...

்ந்நல்ல தொடக்கம் குமரன், அருட்தந்தையின் நல்லாசிகள் உங்களை என்றென்றும் வழிநடத்தட்டும்.
நிறைய எழுத, வாழ்த்துக்கள்.