இயேசு கிறிஸ்துவிற்கு திருமணமாகிவிட்டது அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவர் ஒரு சராசரி மனிதன், கடவுளின் குழந்தை அல்ல.
டான் பிரவுன் அவர்களின் நாவலான டாவின்வி கோட் நாவலில் ராபர்ட் லாங்டன் என்ற கதாபாத்திரம் சோபியா என்ற பாத்திரத்திடம் இவ்வாறு கூறும் சமயம் சோபியா மட்டும் அல்ல எனக்கும் தூக்கிவாரிப் போட்டது.
என்னை முதன் முதலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை வித்தியாசமான ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது டாவின்சி கோட் நாவல்தான்.
இந்த நாவலின் ஆரம்பம் லாவுரே( Louvre ) என்ற மியுசியத்தில் ஆரம்பிக்கிறது. அந்த மியுசியத்தின் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார்.அவர் இறக்கும் நேரத்தில் அவர் விழுந்து கிடக்கும் இடத்தில் ராபர்ட் லாங்டன் பெயரையும் சில எண்களையும் சில வார்த்தைகளையும் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். ராபர்ட் லாங்டனை ஹாவர்ட் பல்கலை கலகத்தில் சரித்திரம் மற்றும் கூறியீட்டியல் பேராசிரியர். சரித்திர ஆராய்ச்சி செய்து வருபவர்.
அங்கு வரும் காவல்த்துறை ராபர்ட் லாங்டன் பெயரை பார்த்து விட்டு ராபர்ட்தான் கொலை செய்தார் என்று சந்தேகம் கொண்டு ராபர்டின் பெயரை அழித்துவிட்டு சம்பவ இடத்திற்கு ராபர்டை அளைத்து வந்து விசாரணை செய்கிரார்கள்.ஜாக்குவஸின் மரண வாக்குமூலத்தில் எண்கள் இருப்பதால் கிரிப்ட்டோகிராபி துறையின் உதவியை நாடுகிறார்கள் காவல் துறையினர்.
அங்கு வேலை பார்க்கும் சோபியா ஜாக்குவஸின் பேத்தி. சோபியா அந்த செய்தியைப் பார்த்தவுடனே தன்னுடய தாத்தா தனக்காகதான் இந்த செய்தி என்பதை உணர்ந்து கொள்கிறாள். இந்த செய்தியால் ராபர்ட் கைது செய்யப்படலாம் என்பதையும் உணர்ந்து இந்த செய்தியை முழுவதுமாக புரிந்து கொள்ள ராபர்டை தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார் தன்னுடய தாத்தா என்பதயும் புரிந்து கொள்ளும் சோபியா, இதனால் ராபர்டிற்கு ஆபத்து உள்ளது என்று உணர்ந்து ராபர்டை போலிஸில் இருந்து தப்புவிக்கிறார்.
இப்படி கொலை என்று சஸ்பென்ஸ் நாவலாக ஆரம்பிக்கும் டாவின்சி கோட் ஒரு புதையல் வேட்டையாக மாறுகிறது.ஜாக்குவஸ் இறக்கும் முன் தான் பல காலம் பாதுகாத்து வந்த ரகசியம் யாருக்கும் தெரியாமலே தொலைந்து விடக் கூடும் என்ற சூழ் நிலை உருவாகி விட்டதாலும், தன்னுடய பேத்தியான சோபியாவிற்க்கும் ஆபத்து இருக்கலாம் என்பதாலும், சோபியாவிற்கு ராபர்ட் லாங்டனை சந்திக்குமாறு விடுகதை போல ஒரு செய்தி எழுதி வைத்தார் என்பதை அறிகிறோம்.
அவர் காத்து வந்த ரகசியம் ஹோலி கிரைல்( holy grail ) எனப்படும் ஒரு கோப்பை என்று அறிகிறோம். இந்தக் கோப்பை கிறிஸ்து தன்னுடய கடைசி உணவு உண்ணும் சமயம் வைண் குடிக்க உபயோகப்படுத்திய கோப்பை என்றும் அறிகிறோம். இந்த கோப்பைதான் உலகில் உள்ள எல்லா புதையலிலும் மிக முக்கியமானது, விலை உயர்ந்தது. கிங் ஆர்தர் போன்றவர்கள் இந்த கோப்பையை கண்டு பிடிப்பதையே தன்னுடய வாழ்க்கையின் லட்சியமாக வைத்து இருந்தார்கள்.
ஆனால் சீக்கிரமே லாங்டன் ஹோலி கிரைல் என்பது உண்மையில் ஒரு கோப்பை அல்ல என்பதை விளக்கி அதன் உண்மையான அர்த்ததை விளக்கி கூறும் சமயமே நாம் முதலில் பாராவில் எழுதி இருக்கும் வசனத்தை ராபர்ட் சோபியாவிடம் கூறுகிறார்.
மேலும் கிறிஸ்து மேரி மங்லாடின் என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார் அவர்களுடய குடும்பம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார். அதற்க்கான ஆதாரங்கள் அடங்கி உள்ள ஆவனங்களே ஹோலி கிரைல் என்று அழைக்கைப் படுகிறது என்றும் கூறுகிறார்.அதை அடையுதற்காகவே ஜாக்குவஸ் கொலை செய்யப் பட்டுருக்கிறார் என்பதையும் கூறுகிறார்.இதன் பிறகு ராபர்டும், சோபியாவும் ஹோலி கிரைலை எதிரிகள் அடையும் முன் எவ்வாறு ஜாக்குவஸ் அமைத்திருக்கும் ஒவ்வொரு புதிருக்கும் விடை கண்டு பிடித்து அடைகிறார் என்பதுதான் நாவல்.
இந்த நாவல் மற்ற சஸ்பென்ஸ் நாவல்களில் இருந்து வித்தியாசப் பட்டுருப்பதற்க்கு கிறிஸ்துவின் வாழ்க்கை நாவலில் பின் புலமாக சொல்லப்பட்டுருப்பது ஒரு காரணம்.
மற்ற காரணம் என்னவென்றால் இந்த நாவலின் கதையை ஒட்டி பல சுவாரஸ்யமான தகவல்களும் சொல்லப் பட்டுருப்பதுதான். உதாரணமாக என்னுடா முந்தய பதிப்பான தெய்வீக எண் என்று அழைக்கப் படும் 1.618ன் ஆச்சர்யமான விஷேசங்கள் நாவலில் கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது.
நைட்ஸ் டெம்ப்லர்(Knights Templar)( இங்கிலாந்து நாட்டில் 1500ல் இருந்த ஒரு குழுவினர் இவர்கள் திடிரென்று சில வருடங்களில் பணம், அதிகாரம் பெற்று போபைவிட பலம் வாய்ந்தவர்களாகிவிட்டர்கள். இவர்களின் பண பலம், அதிகார பலம் கண்டு பயந்த போப் இவர்களை கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்று பல வதந்திகள் இவர்களைப் பற்றி உண்டு. இன்றும் அவர்கள் எவ்வாறு பணம், அதிகாரம் அனைத்தியும் அடைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ) போன்ற சரித்திரத்தில் புதிராக இருக்கும் பல விஷயங்கள் நாவல் முழுவதும் கதையின் ஒட்டத்தினிடயே சொல்லப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு சரித்திரம் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்கள் பிடிக்கும் என்றால் இந்த நாவலை நீங்கள் கண்டிப்பாக படியுங்கள்.
கிறிஸ்து திருமணம் ஆனவரா என்பது பற்றி என்னுடய கருத்துக்கள், டாவின்சி கோடில் அதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் பற்றி அடுத்த பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அண்த்தே, Louvre வந்து 'லூவ்ர்'ங்கோ...
நன்று. தங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். வழங்குங்கள்.
நன்றி.
louver என்பதன் உச்சரிப்பு லூவெஹ் என்பது போல ஃபிரஞ்சு மொழியில் வரும். லூவர் என்று ஆங்கிலத்தில் வரும்.
நீங்கள் சொல்கின்ற புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். நல்ல விறுவிறுப்பான கதை. ஆனால் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
பன்முகத் தன்மை கொண்டிருந்த கிருஸ்துவின் வழித்தோன்றல்கள் பிறகு ஒருமுகமாகி மீண்டும் பன்முகமானது எல்லாரும் அறிந்ததே.
ஆனால் இந்தக் கதை எவ்வளவு உண்மை என்று வரலாற்று ஆய்வாளர்கள்தான் நிரூபிக்க வேண்டும்.
நண்பர் குமரனுக்கு,
தொடர்ந்து தாங்கள் டாவின்சி கோட் குறித்து எழுதி வந்திருப்பதாக தெரிகிறது... வாழ்த்துக்கள்....
புனேயில் கடை கேட்ட நாட்களில், Trainல் புத்தகம் விற்கும் நண்பரிடம் டாவின்சி கோட் புத்தகத்தை வாங்கி ஒருமுறை பார்த்தேன்.. மேலும், அந்த புத்தகம் Trainல் அதிகம் பேரால் வாங்கப்பட்டதையும் நான் அறிவேன்..
பின்னர், தீராநதியில் டாவின்சி கோட் நாவலைக் குறித்த சிறு விமர்சனம் ஒன்றினை அசோகமித்திரன் எழுதியிருந்ததைப் படித்த பின் (நாத்திகவாதியாகிய) எனக்கு அந்த நாவலின் மேல் Grace அதிகமாகி விட்டது.. But, ஒரு முழு நாவலைப் படிக்குமளவிற்கு எனக்கு ஆங்கில அறிவு போதாததால்.. இன்று வரை அது முடியாமல் போனது..
பின்னர் டாவின்சி கோட் திரைப் படமாக வரவிருக்கும் செய்தி அறிந்த பின் அதைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தேன்(இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று நம்பிக்கையில்)... அதற்கும் இந்த பத்தாம்பசலி குருமார்களால் ஆப்பு வைத்தார்கள்.. இந்த நிலையில் உங்களது நாவல் கதைக்கரு சுருக்கம் எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது.. நன்றி..
ஏறகனவே எழுதியிருந்த பதிவையும்-வரலாற்று ஆய்வையும் பார்த்தேன்.. ஆர்வத்திற்கு, முயற்சிக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்...
வலைப் பதிவுக்கு வந்த ஆரம்பத்தில் போட்ட பதிவு இதுன்னு நினைக்கிறேன். அதுதான் கருத்து சொன்னவங்களுக்கு நன்றி சொல்லலை. இப்போ லிவிங் ஸ்மைல் கருத்து சொல்லிருக்காங்க அவங்களுக்கும் எப்போதோ கருத்து சொன்ன ராகவனுக்கும், ஜயராமனுக்கும், அனானி அம்மா / அய்யாவுக்கும் நன்றி.
:-))))))
என்னைக்கோ விதைச்சது இன்னைக்குப் பழுக்குது :-))))))))))
நன்றி குமரன் எண்ணம்.
அதற்கும் இந்த பத்தாம்பசலி குருமார்களால் ஆப்பு வைத்தார்கள்.//
இந்த மாதிரியான வரியை ஒங்கக்கிட்டருந்து எதிர்ப்பார்க்கலை லிவிங் ஸ்மைல்..
பிறமத கோட்பாடுகளை சாடும்போது நமக்கு ஸ்வாரசியமாகத்தான் இருக்கும்.
அதுவே இந்தியர்கள் பெரும்பாலும் பின்பற்றும் மதக்கோட்பாடுகளை லேசாக சாடினால் பொத்துக்கொண்டு எதை எரிக்கலாம் என்று அலையும் கூட்டத்தை பார்த்து பார்வையை திருப்பிக்கொள்வார்கள்..
என்ன ஒரு ஹிப்போக்ரசி..
ஆங்கிலத்தில் என்னவொரு குப்பை எழுதப்பட்டாலும் அதை ஆஹா ஓஹோ என்று புகழ்வதும் அதை தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடுவதும்...
என்னத்த சொல்லி என்ன ஆகப்போவுது..
இதப்பத்தி வந்த பதிவுகள்லாம் போறாதுன்னு இப்படியொரு ஆராய்ச்சி..
வருகைக்கு நன்றி குமரா!
இது எவ்வித பக்கச்சார்பினையோ! இல்லாவிடில் மதச்சார்பினையோ குறிப்பிடுவதற்கு அல்ல என்பதனை யாவரும் புரிந்துகொள்ளவேண்டும். நம்மைப்போன்ற ஆக்கங்களை வெளியிடுபவர்களுக்கு இது ஒரு சவாலாகக்கூட அமையலாம். இருப்பினும் இது எமது பார்வைக்காகவே அன்றி பகைமைக்காக அல்ல என்பதையும் அனைவரும் உணரவேண்டும். வாழ்த்துக்கள் குமரா!
வானம்பாடி -கலீஸ்-
Post a Comment