Tuesday, April 25, 2006

இயேசு கிறிஸ்து திருமணம் ஆனவரா ஒரு அலசல்

டாவின்சி கோட் நாவல்தான் முதன் முதலில் இந்த கேள்வியை என்னுள் எழுப்பியது.

இதைப் பற்றி வலைதளங்களில் தேடும் சமயம் இது பல நாட்களாக இருக்கும் ஒரு சர்ச்சை என்பதை அறிய முடிந்தது.

ஆகவே பல நாட்களாக பல வலைத் தளங்கள் மற்றும் புத்தகங்களைப் படித்தும் எனக்குக் கிடைத்த தகவல்களையும் என்னுடய கருத்துக்களையும் இங்கு கொடுக்கிறேன்.

இந்த அலசலை முதலில் உறுதி படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்

மேரி மங்லாடின் விபச்சாரி அல்ல

பல வல்லுனர்களும் உறுதி செய்யும் தகவல் இது. கிறிஸ்து ஒரு விபச்சாரியை மக்கள் கல் கொண்டு அடிக்கும் சமயம் பாவம் செய்யாதவர் மட்டும் இந்த பெண்ணை அடிக்கலாம் என்று கூறியது உண்மை ஆனால் இந்தப் பெண் மேரி மங்லாடின் அல்ல என்று பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்ட ஒரு விசயம். டாவின்வி கோட் நாவலில் மேரி மங்லாடினின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகதான் அவரை விபச்சாரி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு கோணத்தில் சரி என்றே சொல்லலாம் போப் கிரிகாரி என்பவர்தான் முதன் முதலில் மேரி மங்லாடினை விபச்சாரி என்று கூறினார். 1969ம் வருடம் கிறிஸ்துவ தேவாலயம் மேரி மங்லாடினும், அந்த விபச்சாரியும் வேறு வேறு நபர்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளது.

பைபிள் 100 சதவீதகம் உண்மையை சொல்லவில்லை

இதை உறுதி படுத்திக் கொள்ளப் பட்ட தகவல்களில் சேர்ப்பதே சர்ச்சைக்குரியதுதான். ஆனால் இதில் உண்மை உள்ளது என்பதை பலர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். பைபிளில் என்தெந்த பகுதிகள் வைக்கப் பட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தவர்கள் கிறிஸ்து கடவுள் என்று தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆகவே அவர்கள் கிறிஸ்துவை தெய்வப் பிறவியாக காட்டும் பகுதிகளேயே வைத்தார்கள் என்பது உண்மை. பைபிளில் அவருடைய சீடர்கள் எழுதிய பல பகுதிகள் வைக்கப் படவில்லை. இன்று நமக்கு டெல் ஸீ ஸ்கூரொல் போன்றவை கிடைத்துள்ளன அவை கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவரை ஒரு தெய்வப் பிறவி என்ற நோக்கில் அல்லாமல் ஒரு தலை சிறந்த தலைவனாக சித்தரிகிறது. நாம் இந்த ஆவனங்களை பொய் என்று ஒதுக்கி தள்ளி விட முடியாது ஏனெனில் இதுவும் கிறிஸ்து அவர்களில் சீடர்களாலேயே எழுதப்பட்டது. இது பொய் எனில் பைபிள் மட்டும் எந்த அளவு உண்மை??

இதன் பிறகு நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை.

டாவின்சியின் லாஸ்ட் சப்பர் கிறிஸ்து பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திகிறது

டாவின்சி கோட் நாவலின் மிக முக்கிய கிறிஸ்துவின் திருமணத்திற்கு முக்கிய ஆதாரமாக காண்பிக்க படுவது டாவின்சியின் லாஸ்ட் சப்பர் ஓவியம்தான். இந்த ஓவியத்தை இங்கே கீழே பாருங்கள்




இந்த ஓவியத்தில் கிறிஸ்துவின் இடது புறத்தில் உள்ளது ஒரு பெண் அது மேரி மங்லாடின் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுடய ஆடைகளையும் கவனியுங்கள் கிறிஸ்துவின் ஷாலும், மேரியின் மேலாடையும் மேரியின் ஷாலும் கிறிஸ்துவின் சட்டையும் ஒத்திருப்பதைக் காணுங்கள். டாவின்சி அப்படி வரைந்தது இருவரும் கணவன் மனைவி என்பதைக் குறிக்கத்தான் என்று டாவின்சி கோட் நாவலில் கூறப்படுகிறது. மேலும் இருவருடைய ஷாலும் அதற்கு நடுவே உள்ள இடைவெளியும் M என்ற சொல் உருவாவது போல தோன்றுகிறது பாருங்கள் இந்த சொல் மேரியை குறிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விசயம் என்னவென்றால் தன்னுடய கடைசி உணவைக் கொண்ட சமயம் கிறிஸ்து ஒரு கோப்பையில் வைண் பருகிய பின் அந்த ஒரு கோப்பையில் இருந்தே அவருடய சீடர்கள் அனைவரும் பின் வைண் பருகினார்கள் என்றுதான் இன்று வரை கூறப்பட்டு வருகிறது. அந்த கோப்பையே புனிதக் கோப்பை என்று அழைக்க படுகிறது அதுவே இன்று உலகில் மிகவும் தேடப்பட்டு வரும் புதையல். ஆனால் இந்த படத்தில் அந்த கோப்பை இல்லவே இல்லை. டாவின்சி மேரி மக்லாடினையே புனிதக் கோப்பையின் வடிவாக கருதி வரைந்துள்ளார் என்றும் டாவின்சி கோட் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைப் பற்றி வல்லுனர்களிடம் பல கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் கிறிஸ்துவின் அருகில் உள்ளது ஜான் என்று கூறுகிறார்கள். ஆனால் M என்ற எழுத்திற்க்கும் புனிதக் கோப்பை பற்றியும் ஒரு விளக்கமும் இல்லை.

கிறிஸ்து ஒரு யூதர் ஆகவே அவர் திருமணம் செய்திருக்க வேண்டும்.

கிறிஸ்து வாழ்ந்த கால கட்டத்தில் யூதர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ் நிலை நிழவியது ஆகவே அவருக்கும் திருமணம் நடந்திருக்க வேண்டும்.

இந்தக் கருத்து பற்றியும் வல்லுனர்கள் கிறிஸ்து ஒரு விதிவிலக்காக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யூதர்களின் பழக்க வழக்கங்கள் இருந்ததும் உண்மை.

கினாஸ்டிக் காஸ்பலிஸில்( Gnostic Gospels ) கிறிஸ்துவிற்க்கும் மேரிக்கும் காதல் இருந்திருக்கலாம் போன்று இருக்கும் பகுதிகள்.

கினாஸ்டிக் காஸ்பலிஸ் என்பது சில வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது இது கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவருக்கு மேரியுடன் காதல் இருந்தது என்பதைப் போன்று எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்து மேரியை முத்தமிடுவது போன்று சில பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது.

இதைப் பற்றி வல்லுனர்களிம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இந்த ஆவனங்களை நம்ப முடியாது என்று கூறுகிறனர். சிலர் கிறிஸ்து தன்னுடய சீடர்கள் அனைவரையுமே முத்தமிடுவார் என்று கூறுகிறார்கள்.

இது வரை நான் சேகரித்த தகவல்களை கூறி வந்தேன் இப்பொழுது இதைப் பற்றி என்னுடய கருத்துக்கள்.

டாவின்சி கோடில் எனக்கு பிடித்த ஒரு வசனம் பைபிள் சொர்க்கத்தில் இருந்து பேக்ஸில் வரவில்லை என்ற வசனம்.

என்னைப் பொறுத்த வரை பசி இல்லாமல் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்று பாடு படும் அனைவரும் தெய்வப் பிறவிகள்தாம் அந்த வகையில் கிறிஸ்துவும் தெய்வப் பறவிதான்.

வாடிகன் நகரம் கிறிஸ்துவின் பெயராலே, போப் என்ற ஒருவரின் கருத்திக்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு வருகிறது. பல போப்புகள் மிக நன்றவர்களாகவே இருந்தாலும் சிலர் சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை கொல்வது, சிலுவை யுத்தம் என்று நாடுகள் மேல் படை எடுப்பது என்று தவறான பல காரியங்களை செய்துள்ளார்கள். இன்று உள்ள மத தீவிரவாதம், நிறக் கொடுமை போன்ற விசயங்கள் தேவாலங்களில்தான் ஆரம்பித்தது.

இங்கு கூற வருவது என்னவெனில் கிறிஸ்து என்பவர் தெய்வப் பிறவியாக இருக்கலாம் ஆனால் வாடிகன் நகரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு இல்லை.

ஆகவே கிறிஸ்து உண்மையாக திருமணம் ஆனவராக இருந்தாலுமே அதை மறைக்க வேண்டும் என்று வாடிகன் முடிவு செய்திருந்தால் அது அவ்வாறே நடந்திருக்கும்.

கிறிஸ்து திருமணம் ஆனவாரா என்ற கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை என்று பதில் சொல்லக் கூடிய நிலை இல்லை என்று பதிவை முடிக்கிறேன்

10 comments:

said...

சரித்திர விளக்கம் தளும்பும் நல்லதொரு போஸ்ட். நன்றி. இந்த நாவலை படித்ததும் இந்த விசயங்களை அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். முனையாமல் போய்விட்டேன். இப்பொழுது தங்களால் அந்த குறை ஒருவாறு குறைந்தது. மேலும் தொடருங்கள்

நன்றி

said...

கிருஸ்து மட்டுமல்ல நாம் எல்லாருமே தெய்வக் குழந்தைகள்தான். அதில் ஐயமில்லை. ஆனால் அதை உணர்ந்து நல்லவிதமாக நடந்து கொள்கிறவர்களுக்கு அதன் பெருமை புரிகிறது.

டாவின்சி கோடு நாவலைப் படித்து விட்டுத்தான் எனக்கு ஏசுவின் மேல் கொஞ்சம் ஈடுபாடு வந்தது. அவர் திருமணம் செய்திருந்தாலும் செய்யா விட்டாலும் தவறில்லை. இறைமகன் என்பதால் திருமணம் கூடாதென்று இருக்க வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.

கதையில் வருவது பொய்யானால் பிரச்சனையில்லை. ஆனால் உண்மையானால் ஏசுவோடு சேர்த்து மேரி மகதலினையும் தொழுவதே சரியாக இருக்கும். ஆனால் அது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும்.

said...

நன்றி ஜயராமன், ராகவன். இந்த பதிவு கிறிஸ்துவின் திருமணமானவரா? என்பதைப் பற்றி மட்டுமே விவாதம் செய்கிறது அவருடய தெய்வீகத் தன்மைப் பற்றி அல்ல.

said...
This comment has been removed by a blog administrator.
said...

மிக அழுத்தமான பதிவு..எனக்கு தெரிஞ்சத சொல்லுவேன்..

மதலேன் மரியாள் ( இது தான் வீரமாமுனிவர் கொடுத்த பெயர் ) பல இடங்களில் வருகிற ஒரு பெயர்.

அவருக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உண்டு என்று காண்கிறோம்..

கிருஸ்து உயிர்த்து எழுந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சியை இராயப்பர், மற்றும் அருளப்பர் ( கிருஸ்துவின் அன்புக்கு உரிய சீடர் என்று பைபிள் சொல்லும் நபர்) ஆகியவர்களுக்கு முதலில் அறிவித்தவர் மதலேன் மரியாள்..காரணம் மூண்றாம் நாள் சடங்குக்காக அதி காலையில் கல்லரையை அடைகிறார்..

இதற்க்கு முன்பு, ஒரு விருந்துக்கு முன்னதாக இயேசுவின் கால்களை விலை உயர்ந்த நறுமண தைலத்தால் கழுவி, தன் கூந்தலால் துடைக்கிறாள். இதனை இயேசுவை காட்டி கொடுத்ததாக சொல்லப்படும் யூதாஸ் ஸ்காரியேத்து கண்டிக்கிறார். யூதாஸ் சொல்லும் காரணம் அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே என்பதாகும்.ஆனால் இயேசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ( ஆதாரம் : பைபிள்)

இயேசு மதலேன் மரியாளின் வீட்டில் மட்டும் தங்கியதாக குறிப்புகள் உண்டு...

மேலும் இயேசு எந்த பெண்னோடும் பேசும் வழக்கம் கொண்டவர் அல்லர்..ஒரு சம்பவம் பைபிளிள் இடம் பெறுகிறது..இயேசு ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசும் சம்பவம். இந்த நிகழ்ச்சியை காணும் உணவு வாங்கி வர போய் திரும்பிய அவரது சீடர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்..ஆனால் அவர் அந்த பெண்ணுடன் என்ன பேசினார் என்று எவரும் கேட்க வில்லை...ஆனால் அவர் நிலை வாழ்வை கொடுக்கும் தண்ணீரை பற்றி பேசியதாக அந்த பெண் அறிவிக்கிறார்..

மதலேன் மரியாளின் சகோதரன் இறக்கும் சம்பவம் பைபிளிள் இடம் பெறுகிறது..இயேசு இதனால் மனம் உடைந்து அழுததாக அறிகிறோம்..இயேசு மனம் உடைந்து அழுததாக வேறு ஒரே இடத்தில் தான் குறிப்பு உண்டு..அது கெத்சமெனி தேட்டத்தில் ரத்த வியர்வை சிந்தி அழுத இடம்..சிலுவையில் மரிக்கும்போது கூட இயேசு அழுததாக காண கிடைக்கவில்லை..

மேலும் அவர் மதலேன் மரியாளின் சகோதரரை உயிர்ப்பித்ததாக காண கிடைக்கிறது...

மேலும் அவர் தன் தாயை தன் சீடரிடம் ஒப்படைக்கும் தருணத்தில் (சிலுவையில் மரிக்கும்போது) மதலேன் மரியாள் இல்லையே ? இது கூட சிந்திக்க வேண்டிய விஷயம்..

டாவின்சி கடைசி இரவு உணவு சம்பவத்தை கண்ணால் கண்டவர் இல்லையே ? அதனால் அவரது கற்ப்பனை ஒவியம் கேள்விக்கு உரியது...

said...

ரவி அவர்களுக்கு பின்னூட்டங்களுக்கு நன்றி.

எனக்கு இந்த நாவலை தமிழில் யாரேனும் மொழி பெயர்த்துள்ளார்களா என்பதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

உங்களுடய தகவல்களுக்கு நன்றி.

நீங்கள் கடைசி நாள் உணவை நேரில் கண்டவர்கள் யாருமில்லை என்று கூறியுந்தீர்கள் அது முற்றிலும் உண்மை அல்ல. கடைசி நாள் உணவை கிறிஸ்து அவர்களின் சீடர்கள் நேரில் கண்டார்கள் அல்லவா?

டாவின்சி கடைசி நாள் உணவு பற்றி அப்படி ஏன் வரைந்தார் என்றும் ஒரு சர்ச்சை உள்ளது.

கடைசி நாள் உணவை நேரில் கண்ட மதலேன் அம்மையாரின் குறிப்புகளும், கிறிஸ்து அவர்களின் குறிப்புகள் கூட இன்றும் உள்ளது என்றும் அவற்றை பரயாரி ஆப் சயான்( priory of sion ) என்ற ரகசிய குழு ஒன்று பாதுகாத்து வருகிறது என்றும், டாவின்சி அவருடய காலத்தில் அதன் தலைவராக இருந்ததால் அவருக்கு கடைசி நாள் உணவு எவ்வாறு இருந்தது என்று தெரியும் என்றும் கூறப்படுகிறது.

நான் மேற்கூறிய விசயங்கள் அனைத்துமே சர்ச்சைக்குறியது.

என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது என்னவெனில்

காலம் காலமாக வாடிகன் நகரம் பெண்களை இழிவாகவே நடத்தி வருகிறது சூனியக்காரிகள் எரிப்பு என்ற பெயரில் படித்த பெண்களை கொல்வது, முதல் பாவம் புரிந்தது ஏவாள் என்பதால் பெண்ணை இழிவாக நினைப்பது என்று பல உதாரணங்கள் சொல்லலாம் .

கிறிஸ்து என்ற தெய்வீகப் பிறவியின் கருத்துக்கள் என்றுமே பெண்ணை இழிவாக நடத்தச் சொன்னதில்லை அப்படி இருக்கும் பொழுது எங்கோ ஒரு இடத்தில் அதிகாரம் தவறான கைகளில் சென்றுள்ளது என்பதை உணர முடிகிறது. அது ஆரம்ப காலகட்டங்களிலேயே நடந்துள்ளது என்பது என் கருத்து.

அப்படி ஆரம்ப கால கட்டங்களில் தவறு நடந்த சமயம் கிறிஸ்து அவர்களின் திருமணமும் மறைக்கப் பட்டிருக்கலாம்.

ஆனால் அவ்வாறு உறுதியா நடந்தது என்று கூற இன்று நமக்கு ஆதாரங்கள் இல்லை.

said...

I read your blog on Davinci code...and would like to add some of my comments to it.

1. The gnostic gospels are not considered to be a part of the contemporary Bible not only beacuse of the controversial nature but for their period. Those scrolls were found to be written around 200 AD (Jesus died in 33 AD).But the gospels which are currently a part of bible are written around 100 AD.So , we can atleast believe that they were written by the immediate disciples of Jesus as it claims.But for the Gnostic gospels , it was not written by the immediate disciples.And to add one more thing , GNOSTICISM is a sect popular in that period when christianity was surging. Christianity and Gnosticisn are diametrically opposite in their views.They believe in WISDOM and Knowledge as the only means of attaining GOD.But slowly the sect lost its stature adn vanished. SO all the controversial literature which Dan Brown uses in NOVEL were believed to be written by Gnosticians.




2.Soon after Jesus died, people were divided in their perspectives on him . Some thought him to be a a great prophet , some as an ordinary man , and some as the Son of God(or GOD himself).If we can put ourselves in the shoes of the people at that period this division is quite natural.As a result ,people holding differnt perspective wrote books , letters , scrolls etc prescribing their own reflections about him.Hence the confusion of Historical Jesus(MAN) and divine Jesus (GOD) .This confusion persisted even after his death and it will perist till the end of the world. According to me the reason behind the confusion is we are looking for wrong things in wrong place. The history books , scrolls archaelogical evidence etc etc everything can only affirm the existence of a person called Jesus , but not his divinity.The answer to the question "WHether Jesus is GOD ? " has to be answered in the heart of a man.

I would like to end by quoting a verse in the Bible. When christianity was spreading like fire all over the world , the Mesopotomian king (current day IRAQ) fearing the spread ,thought of curbing their activism.But an advisor in his cabinet said " Leave it to its own course. If it is a built on false cooked up story it will falter and vanish , if it is founded on TRUTH it will prevail" .And , YES it has prevailed quite well in the past 2000 years.

said...

dear jp,
thanks really for your comments. I would really like to answer some of questions here.

1. You are saying that the gnostic gospels are written at around 200 AD. But please bear in mind the old testament of Bible was actually commissioned by Council of Nicea in 325 AD which makes Gnostic gospels older than bible which exists right now. Also why was only 5-6 disciples part has alone made it to bible when Jesus had more than twice the number of primary disciples? These are some of the questions which cannot be answered which has raised many further questions.

2. I cannot agree with you more on this point. kudos to you for putting it absolutely right. Its people heart which decides Jesus Christ's divinity. But again I often wonder whether his true message has been lost somewhere in the due course. Christianity as a Faith like all other faiths has had its share of its own flaws.

I only wonder if Jesus Christ originally preached some of the things which are followed in christianity or the people have taken his deity to their own advantage to introduce their own beliefs?

By being married doesnt dimnish Jesus Christ's Divinity, has human intervention hide his marriage to promote their own message instead of Jesus Christ is really my question here.

said...

ரவி அவர்களின் பின்னூட்டத்தால் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.

said...

Excellant Post ravi :)