ரெட்டிப்பில் இன்று மும்பை குண்டு வெடிப்பில் இறந்த, பாதிக்கப்பட்ட சிலருடைய கட்டுரைகள் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை இங்கே கொடுத்திருக்கிறேன்.

ரமேஷ் விட்டல் நாயக் ஒரு உடைந்து போன தந்தை

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ரமேஷ் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். பிப்ரவரி 24லில் அவருடைய இளைய பிள்ளையான ரச்ஷனா பாத்ரூமில் தடுக்கி விழுந்து மிக மோசமாக அடிப்பட்டது.
ஜீலை 11ல் இவருடைய இரண்டாவது மகள் நந்தினியை குண்டு வெடிப்பில் இழந்தார். இவரும் இவர் மகன் ஆஷிஷும் ஒரு ஆட்டோமொபைல் பட்டறை வைத்துள்ளார்கள்.
ஐந்து மாத இடைவெளியில் இரண்டு மகள்களை இழந்துள்ளேன். வெளியில் பார்ப்பதற்கு உயிரோடு இருப்பது போல தெரியும் ஆனால் உண்மையில் உள்ளே இறந்து விட்டேன்.
ப்ரீத்தி சாவந்த்

இவருடைய கணவர் இந்த ரயில் விபத்தில் காயமடைந்து அப்போது இருந்தே கோமாவில் இருக்கிறார். இவருடைய கணவருக்கும் காய்கறிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
இவருடைய கணவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது கூட தெரியாது.
இவருடைய கணவருக்கு ஐந்து முறை ஆப்பரேசன் நடந்துள்ளது. இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை.
கிளாடிஸ் டீசேல்ஸ்

என்னுடைய தம்பி சான்போர்ட் முதல் வகுப்பு பாஸ் வைத்திருந்தாலும் வழக்கமாக இரண்டாம் வகுப்பில் தான் பயணிப்பான். குண்டு வெடித்த நாளில் முதல் வகுப்பில் பயணம் செய்தான். குண்டு வெடித்த அதே நாளில்தான் எங்களுடைய தாயார் வெளிநாடு சென்றிருந்தார். அங்கே இறங்கிய உடனே திரும்பி வருமாறு ஆகி விட்டது. சான்போர்டின் மரணம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. தம்பியுடைய 10 வயது மகனும், மனைவியும் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவே இல்லை.
குண்டு வெடிப்பில் 187 பேர் மட்டுமே இறந்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் என் தம்பியைத் தேடி நான் சென்ற ஆஸ்பத்திரிகளிலும், பிணகிடங்குகளிலும் இரு(ற)ந்தவர்களின் எண்ணிக்கை கண்டிப்பாக இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு ஒரு அமைப்பையோ இல்லை மதத்தையோ இல்லை அரசாங்கத்தையோ இல்லை அரசியலையோ குறை கூறி அதன் பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடாது.
இது போன்ற குண்டு வெடிப்புகள் குறைய வேண்டுமெனில் எல்லோரிடமும் மாற்றங்கள் வர வேண்டும்.
ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் துவேஷங்கள், கோபங்கள் குறைந்தாலொழிய மகள்(ன்), கணவர், தம்பி என்று தொலைத்துக் கொண்டே தான் இருப்போம்.
மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் ஜாதிகளின் பெயரால் இன்று சண்டை இட்டுக் கொண்டு பிரிந்திருக்கும் நாம் அனைவரும் நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.
எல்லாமே உயிர்தான் எல்லாருமே மனிதர்கள் தான் என்பதை உணர வேண்டும். குல்லா, பட்டை, கிராஸ் என்று நம்பிக்கைகள் அடிப்படையில் நாம் மனிதர்கள் என்பதை மறக்க செய்து விடக் கூடாது.
துவேஷங்களை களையுங்கள் ப்ளீஸ்.